Published:Updated:

``சிகரெட் பழக்கத்தை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்!"- பிரியங்கா சோப்ராவை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

``இந்த நிலைமையுடன் வாழ்வது எப்படி என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காற்றைச் சுத்திகரிக்கும் மாஸ்க் இருப்பதால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.''

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது புதிய படப்பிடிப்புக்காக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் இன்ஸ்டாகிராமில் மாஸ்க் அணிந்து தனது செல்ஃபி ஒன்றைப் பதிவிட்டார். அதை நெட்டிசன்கள் பெருமளவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Priyankachopra
Priyankachopra

பிரியங்கா சோப்ரா மற்றும் ராஜ்குமார் ராவ் இணைந்து நடிக்கும் `தி வைட் டைகர்' படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. காற்று மாசு அங்கு உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பிரியங்கா நீலநிற மாஸ்க் ஒன்றை முகத்தை மூடும் விதமாக அணிந்து அதை செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

`மிஸ் யூ கோலி; பன்ட் -ஐ இப்போது எதுவும் சொல்லமுடியாது!’ - ரோஹித் ஷர்மா #IndvBan

அதில், டெல்லியில் அதிகரித்தது வரும் காற்று மாசுபாடு குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், இதிலிருந்து எல்லாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், "காற்று மாசுபாட்டைச் சமாளிப்பது கடினம். இந்த நிலைமையுடன் வாழ்வது எப்படி என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காற்றைச் சுத்திகரிக்கும் மாஸ்க் இருப்பதால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். வீடு இல்லாதவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Instagram post
Instagram post

இந்தப் பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் பிரியங்காவின் புகை பிடிக்கும் பழக்கத்தை முன் நிறுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர்.

தனது 5 வது வயதிலிருந்து ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்படுபவர் பிரியங்கா. "நீங்கள் முதலில் உங்கள் சிகரெட் பழக்கத்தை விடுங்கள். அது உங்கள் உயிருக்கே ஆபத்தானது. பொழுது போக்குக்காக நீங்கள் புகை பிடிக்கும் படங்களைப் பகிர்ந்து வருகிறீர்கள். அது வருத்தம் அளிப்பதாக உள்ளது" என்று அக்கறையுடன் கூறியுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

எனினும் சில ரசிகர்கள், புகை பிடிப்பது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று பிரியங்காவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.