பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அபூர்வா மேத்தாவின் பிறந்தநாளையொட்டி பிரமாண்ட பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கொரோனாவிற்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய பார்ட்டியாக கருதப்பட்ட இப்பார்ட்டிக்கு கரண் ஜோகர் பாலிவுட் பிரபலங்கள் அனைவரையும் அழைத்திருந்தார். இதில் நடிகை கத்ரீனா கைஃப் தனது கணவர் விக்கியுடன் கலந்து கொண்டார்.

நடிகர் ஷாருக் கான் தனது பதான் படத்தின் படப்பிடிக்காக வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் அவரின் மனைவி கௌரி கான் தனது மகன் ஆர்யன் கானுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். இதுதவிர இளம் நடிகைகள் அலியா பட், அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், சனயா கபூர், கரண் ஜோகரின் நண்பராக இருந்து எதிரியாக மாறி மீண்டும் தோழியாக மாறியுள்ள கஜோல் ஆகியோரும் வந்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஐஸ்வர்யா ராய், அவரின் கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் விடுமுறையை களிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டனர். இதே போன்று கரீனா கபூரும் தனது சகோதரி கரிஷ்மா கபூருடன் வெளிநாடு சென்று இருக்கிறார். தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் இவர்களால் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து அவரின் மகள் ஸ்வேதா மற்றும் நவ்யா நந்தா, தயாரிப்பாளர் சோயா அக்தர், பரினிதி சோப்ரா, மிருனால் தாக்குர் உட்பட பாலிவுட் நடிகைகள் அனைவரும் ஆஜராகி இருந்தனர். இதுதவிர நடிகர் அர்ஜூன் கபூர், விஜய் தேவரகொண்டா, வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா, நடிகை மாதுரி தீட்ஷித், கணவர் ஸ்ரீராம் நானே ஆகியோரும் வந்திருந்தனர்.

அனன்யா பாண்டேயின் காதலன் என்று கருதப்படும் இஷானும் வந்திருந்தார். ஆனாலும் வரும் போது இருவரும் சேர்ந்து வரவில்லை. பாலிவுட் பார்ட்டில் கரண் ஜோகர் அனைவரையும் உற்சாகமாகக் கவனித்தார். திருமணமே செய்து கொள்ளாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள கரண் ஜோகர் பாலிவுட்டில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.