Published:Updated:

Pathaan Censor Details: தீபிகாவின் காவி நிற ஆடைக்குத் தடையில்லை; ஆனால் `PMO' வார்த்தைக்கு நோ!

Pathaan | பதான்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (Censor Board) 'பதான்' திரைப்படத்தில் சில மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்துள்ளது. இதனுடன் படத்துக்குப் பல்வேறு சோதனைகளும் வந்த வண்ணமே உள்ளன.

Pathaan Censor Details: தீபிகாவின் காவி நிற ஆடைக்குத் தடையில்லை; ஆனால் `PMO' வார்த்தைக்கு நோ!

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (Censor Board) 'பதான்' திரைப்படத்தில் சில மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்துள்ளது. இதனுடன் படத்துக்குப் பல்வேறு சோதனைகளும் வந்த வண்ணமே உள்ளன.

Published:Updated:
Pathaan | பதான்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் தயாரிப்பில், விஷால் - சேகர் இசையமைப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'Besharam Rang' என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அப்பாடலால் அப்படம் 'பாய்காட்' (Boycott) எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள 'Besharam Rang' பாடலுக்கு தீபிகா படுகோன் கவர்ச்சியாகக் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு நடனம் ஆடியிருப்பது இந்து சமயத்துக்கும், இந்திய கலாசாரத்திற்கும் எதிராக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க-வினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Pathaan | பதான்
Pathaan | பதான்

இதனிடையே மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (Censor Board) 'பதான்' திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப் பரிந்துரைத்துள்ளது. ரிலீசுக்கு முன்பு திருத்தப்பட்ட பதிப்பைச்  சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாக, பாடலில் இடம் பெற்ற சில காட்சிகளைத் திரும்ப எடுக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அக்கோரிக்கை தயாரிப்பாளர் தரப்பில் ஏற்கப்படாததால் அந்த முடிவு கைவிடப்பட்டு படத்துக்குத் தனிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றங்கள்?

'Besharam Rang' பாடலில் வரும் குளோஸ் அப் காட்சிகள், தீபிகாவின் சைடு போஸ் காட்சிகள் மற்றும் சில நடன அசைவுகளின் காட்சிகள் மாற்றப்பட வேண்டும். வசனத்தில் ஸ்காட்ச் என்ற வார்த்தை மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் பிரதமருக்குப் பதிலாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் என மாற்றப்பட வேண்டும். மேலும் 13 இடங்களில் இடம்பெற்றிருக்கும் PMO என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த தணிக்கை வாரியம் தீபிகா படுகோனின் காவிநிற பிகினி ஆடை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இது மட்டுமின்றி, `திருமதி பாரத் மாதா' என்பது `ஹமாரி பாரத் மாதா' என்றும், அசோக் சக்ரா என்பது வீர் புரஷ்கர் என்றும் மாற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல பல இடங்களில் `RAW' அமைப்பின் பெயருக்குப் பதிலாக `Hamare' என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pathaan | பதான்
Pathaan | பதான்

'Besharam Rang' பாடல் தொடர்ந்து இடம் பெறுவதால் இந்து அமைப்புகள் படத்தைப் புறக்கணிக்கும்படி அழைப்பு விடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் உள்ள ஒரு மாலில் பஜ்ரங்கு தள் அமைப்பினர் படத்தின் பேனர்களைக் கிழித்து அடித்து நொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதோடு படத்தின் டிரெய்லர் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்துள்ளது. ஆனால் படத்தின் டிரெய்லர் வரும் 10ம் தேதிதான் படக்குழுவினரால் வெளிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.