Published:Updated:

Pooja Hegde: "மொழி தெரியாது, ஒரு வருடம் பட வாய்ப்பு ஏதும் இல்லை!"- பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்

Pooja Hegde | பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:

Pooja Hegde: "மொழி தெரியாது, ஒரு வருடம் பட வாய்ப்பு ஏதும் இல்லை!"- பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Pooja Hegde | பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2012-ம் ஆண்டு தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அவர் நடித்த 'Oka laila kosam', 'Maharshi', 'Most Eligible Bachelor', 'Ala Vaikunthapurramuloo' போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

Pooja Hegde | பூஜா ஹெக்டே
Pooja Hegde | பூஜா ஹெக்டே

அதே சமயம் அவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமலும்  இருந்திருக்கிறது. இப்படித் தனது சினிமா வாழ்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பூஜா ஹெக்டே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

“திரையுலகில் எனது வெற்றி என்பது அவ்வளவு எளிதாக எனக்கு அமைந்துவிடவில்லை. எனது பத்து வருடப் பயணம் ரோலர் கோஸ்டர் போன்றது.

தமிழ், தெலுங்கு, போன்ற படங்களில் நடித்தேன். எனக்கு மொழி தெரியாது என்பதால் முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. சினிமா துறையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து இருக்கிறேன். எனது படங்கள் சரியாக ஓடவில்லை. ஒரு வருடம் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று பட வாய்ப்புகள் குவிந்தது அதன்பிறகு பிசியாக நடிக்கத் தொடங்கினேன்.

Pooja Hegde | பூஜா ஹெக்டே
Pooja Hegde | பூஜா ஹெக்டே

திரைத்துறையைச் சாராத குடும்பத்திலிருந்து வந்த நான் இத்துறையைத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். எனது வாழ்க்கை கதை என்றாவது ஒரு நாள் யாரையாவது ஊக்குவிக்கும் என நம்புகிறேன்" என்று சினிமாவில் தனது ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வாரம் ரம்ஜான் பண்டிகை அன்று, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’. 'வீரம்' படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக பூஜா நடித்துள்ளார்.