Published:Updated:

Adipurush: டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் `ஆதிபுருஷ்'; விமர்சனங்களுக்குப் படக்குழு வெயிட்டிங்!

Adipurush | ஆதிபுருஷ்

ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்தியேக காட்சி டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

Published:Updated:

Adipurush: டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் `ஆதிபுருஷ்'; விமர்சனங்களுக்குப் படக்குழு வெயிட்டிங்!

ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்தியேக காட்சி டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

Adipurush | ஆதிபுருஷ்
தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில், ஜூன் 16-ம் தேதி வெளியாகவுள்ள படம் `ஆதிபுருஷ்'. பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தின் மாபெரும் காவியமாகக் கருதப்படும் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ‘முதல் மற்றும் பிரத்யேக காட்சி’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஜூன் 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள 22-வது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற இருக்கிறது.

Adipurush | ஆதிபுருஷ்
Adipurush | ஆதிபுருஷ்

அண்மையில் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவிற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதில் 'ஆதிபுருஷ்' திரைப்படத்தைத் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி VFX காட்சிகளின் தரம் சரியாக இல்லை போன்ற பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் படக்குழு  சந்தித்த நிலையில், மீண்டும் அதை மெருகேற்றும் பணிகள் நடைபெற்றன. இப்போது படம் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.  

இதுகுறித்து ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் பேசுகையில், “'ஆதிபுருஷ்' பொறுத்தவரைக்கும் அது ஒரு படம் அல்ல. அது ஓர் உணர்ச்சி. நான் ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். உலகின் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் 'ஆதிபுருஷ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது எனக்கும் என்னுடைய படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஓம் ராவத்
ஓம் ராவத்

காரணம் நமது கலாசாரத்தின் மிகவும் வேரூன்றிய ஒரு கதையை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு ஆதிபுருஷைக் கண்டு ரசிக்கும் பார்வையாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்கு உற்சாகமாகக் காத்திருக்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.  

மேலும் இது தொடர்பாகப் பேசிய நடிகர் பிரபாஸ், "நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஆதிபுருஷின் உலகளாவிய பிரத்யேகக் காட்சியைக் காண்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். நமது தேசத்தின் நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் திட்டத்தில் ஓர் அங்கமாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். நமது இந்தியத் திரைப்படங்களை உலக அரங்கில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரபாஸ்
பிரபாஸ்

என்னைப் பொருத்தவரை 'ஆதிபுருஷ்' சர்வதேச அளவிலான அரங்குகளைச் சென்றடைந்ததை ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஓர் இந்தியனாகவும் என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.