Published:Updated:

Adipurush: ராமாயணத்தை மையப்படுத்திய பிரபாஸ் படம்; அயோத்தியில் பிரமாண்டமான டீசர் வெளியீட்டு விழா!

பிரபாஸ், கீர்த்தி சனோன்

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை அயோத்தியில் பிரமாண்டமான முறையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Adipurush: ராமாயணத்தை மையப்படுத்திய பிரபாஸ் படம்; அயோத்தியில் பிரமாண்டமான டீசர் வெளியீட்டு விழா!

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை அயோத்தியில் பிரமாண்டமான முறையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Published:Updated:
பிரபாஸ், கீர்த்தி சனோன்
நடிகர் பிரபாஸ் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் `ஆதிபுருஷ் (Adipurush)' என்னும் படத்தில் ராமர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் (Om Raut) இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D வடிவில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கான டீசர் மற்றும் போஸ்டர் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சரயு நதிக்கரையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் ராமர் பிறந்ததாகக் கருதப்படும் அயோத்தியில் இந்த நிகழ்வு நடைபெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ஆதிபுருஷ் படக்குழு
ஆதிபுருஷ் படக்குழு

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும், ஏராளமான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன், டெல்லியில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள தசரா பண்டிகையில் நடிகர் பிரபாஸ், அக்டோபர் 5ம் தேதி கலந்து கொண்டு இராவணன் உருவ பொம்மை எரித்து விழாவைச் சிறப்பிக்க உள்ளதாக விழாவை நடத்தும் லவ் குஷ் (Lav Kush) ராம்லீலா கமிட்டியினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் 2023-ல் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் இப்போதிருந்தே தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.