Published:Updated:

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்: 3 மாதங்கள் ஆன மகளுக்கு `நீண்ட' பெயர்; பெயரின் விளக்கம் சொன்ன தம்பதி!

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தனது மகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். அவரின் மகள் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்: 3 மாதங்கள் ஆன மகளுக்கு `நீண்ட' பெயர்; பெயரின் விளக்கம் சொன்ன தம்பதி!

வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தனது மகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். அவரின் மகள் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

Published:Updated:
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார். மூன்று மாதங்களாக குழந்தைக்கு பெயர் வைக்காமல் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது தனது மகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். இருவரும் தங்களது மகளுக்கு மால்தி மரியா சோப்ரா ஜோனஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். மால்தி என்பது ஒரு பூவோடு தொடர்புடையது. அதோடு பிரியங்கா சோப்ராவின் தாயார் மதுமால்தியின் பாதி பெயரை தங்களது மகளுக்கு பிரியங்கா சூட்டியிருக்கிறார். சோப்ரா, ஜோனஸ் என தம்பதியினர் இருவரின் குடும்பப் பெரையும் இணைத்து வைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் ஜனவரி 15-ம் தேதி குழந்தை பிறந்தது

கணவருடன் பிரியங்கா சோப்ரா
கணவருடன் பிரியங்கா சோப்ரா

இன்னும் தனது குழந்தையை வெளியுலகிற்கு பிரியங்கா காட்டவில்லை. பிரியங்கா சோப்ராவும், நிக் சோனஸும் 2018ம் ஆண்டு சில மாதங்கள் காதலித்துவிட்டு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பிரியங்கா சோப்ராவின் தாயார் கடந்த மாதம் டிவி நிகழ்ச்சி ஒன்றின் லைஃவ் ஷோவில் பேசுகையில், எனது பேத்தியை நான் இன்னும் பார்க்கவில்லை. அவள் அமெரிக்காவில் இருக்கிறார். விரைவில் அமெரிக்கா சென்று எனது பேத்தியை பார்க்க இருக்கிறேன். இப்போது எனது பேத்தி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். பிரியங்கா சோப்ரா இந்தியில் ஜீ லி சாரா என்ற படத்தில் கடைசியாக நடித்தார். இதில் கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட்டும் நடித்து இருந்தனர். பிரியங்கா சோப்ரா மற்றுமல்லாது பிரீத்தி ஜிந்தாவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். அதோடு நடிகர் ஷாருக்கான், இயக்குனர் கரண் ஜோகரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.