Published:Updated:

``அவர்களுக்காக மணிக்கணக்கில் செட்டில் காத்திருக்க வேண்டும்" - கொதித்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

திரைத்துறையில் பெண் நடிகர்களுக்கு நியாயமான ஊதியம் தரப்படுவதில்லை என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

``அவர்களுக்காக மணிக்கணக்கில் செட்டில் காத்திருக்க வேண்டும்" - கொதித்த பிரியங்கா சோப்ரா

திரைத்துறையில் பெண் நடிகர்களுக்கு நியாயமான ஊதியம் தரப்படுவதில்லை என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

Published:Updated:
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஹாலிவுட்டிலும் கால் பதித்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதுதவிர, சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்துவரும் இவர், 2006ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, திரைத்துறையில் பெண் நடிகர்களுக்கு நியாயமான ஊதியம் தரப்படுவதில்லை என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

இதுபற்றி பேசிய பிரியங்கா சோப்ரா, "பாலிவுட்டில் ஆண்களுக்குச் சமமாக சம்பளத்தை நான் பெற்றதேயில்லை. என்னுடன் நடிக்கும் சக ஆண் நடிகர்களின் சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே எனக்கு சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஆண்-பெண் இருவரின் சம்பள மதிப்பிலும் இருக்கும் வேறுபாடுகள் மிகவும் அதிகம். பல பெண் நடிகர்களுக்கு இன்னும் இது நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏன், நான் இப்போது பாலிவுட்டில் நடித்தாலும் எனக்கும் இதே நிலைமைதான். எனது தலைமுறை பெண் நடிகர்கள் சம ஊதியம் கேட்டிருக்கிறார்கள். நாங்களும் கேட்டோம், ஆனால் கிடைக்கவில்லை. படப்பிடிப்பிற்காக சரியான நேரத்திற்கு வந்து மணிக்கணக்காக நீண்ட நேரம் செட்டிலேயே நாங்கள் காத்திருப்போம். ஆனால் ஆண் நடிகர்கள் அவர்களுக்கான நேரத்தில் மட்டும் வந்துவிட்டு செல்வார்கள். எப்போதும் படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். இது ஹாலிவுட்டிலும் நடக்கிறது" என்று வெளிப்படையாகப் பேசினார்.