Published:Updated:

"அடல்ட் படங்களின் நகைச்சுவை பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கின்றது!"- ராதிகா ஆப்டே ஆதங்கம்

ராதிகா ஆப்டே | Radhika Apte

திரைப்படங்களில் இருக்கும் 18+ நகைச்சுவைகள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கின்றன என்று விமர்சித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்டே.

"அடல்ட் படங்களின் நகைச்சுவை பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கின்றது!"- ராதிகா ஆப்டே ஆதங்கம்

திரைப்படங்களில் இருக்கும் 18+ நகைச்சுவைகள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கின்றன என்று விமர்சித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்டே.

Published:Updated:
ராதிகா ஆப்டே | Radhika Apte

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்டே, 18+ நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பெண்களை மரியாதையின்றி நடத்தும் விதமாகவும் இருக்கின்றன என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இது பற்றிப் பேசிய அவர், "நான் நடித்த பத்லாபூர் (Badlapur) திரைப்படத்திற்குப் பிறகு 18+ நகைச்சுவைகள் (Adult Comedies) இருக்கும் பாணியிலான திரைப்படங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இது குறித்து எனக்கு பிரச்னை ஏதுமில்லை. நான் நடித்திருந்த 'Hunterrr' திரைப்படம் கூட 18+ நகைச்சுவைகள் அடங்கிய திரைப்படம்தான்.

ராதிகா ஆப்டே
ராதிகா ஆப்டே

ஆனால், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட அத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பெண்களை மரியாதையின்றி நடத்தும் விதமாகவும் இருக்கின்றன. இது போன்ற திரைப்படங்கள் பெண்களை ஒரு போகப்பொருளாகக் காட்சிப்படுத்துகின்றன. எனவே, எனக்கு இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லை" என்று கூறினார்.

ராதிகா ஆப்டே
ராதிகா ஆப்டே

மேலும், "படத்தின் திரைக்கதையைப் படித்தாலே படத்தில் எப்படிப்பட்ட நகைச்சுவை இருக்கின்றது என்று தெரிந்துகொள்ள முடியும். ஆணாதிக்க மனநிலையில் இருக்கும் ஒருவர் தனது திரைப்படத்தில் பெண்ணைத் தவறாகக் காட்டப்படுவதைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை. ஆனால் பெண்ணை இழிவுபடுத்தும் நகைச்சுவைகளைச் சிலர் அறியாமலே தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்துகின்றனர். நீங்கள் அந்த நகைச்சுவைகளைக் கொண்டாட ஆரம்பித்தால் அது ஆபத்தாக மாறிவிடும். நான் இதுபோன்ற தவறான செயல்களில் பங்கெடுக்க மாட்டேன். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார்.