Published:Updated:

மும்பை: அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெளியே போராட்டம்! சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தாரா?!

அமிதாப் பச்சன் ( Rajanish Kakade | AP )

நடிகர் அமிதாப் பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுப்பதால் அவரது வீட்டிற்கு வெளியில் ராஜ்தாக்கரே கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:

மும்பை: அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெளியே போராட்டம்! சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தாரா?!

நடிகர் அமிதாப் பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுப்பதால் அவரது வீட்டிற்கு வெளியில் ராஜ்தாக்கரே கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமிதாப் பச்சன் ( Rajanish Kakade | AP )

மும்பை ஜுகுவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வீடு இருக்கிறது. பிரதிக்‌ஷா என்ற இந்த பங்களா இருக்கும் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இத்தெருவில் உள்ள அனைத்து கட்டடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஒவ்வொரு கட்டடத்திலும் குறிப்பிட்ட அளவு தடுப்பு சுவரை இடிக்க வேண்டியிருந்தது. அனைத்து கட்டட உரிமையாளர்களும் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்துவிட்டனர். இதன் மூலம் சாலை விரிவாக்க பணி 90 சதவீதத்திற்கும் அதிகமாக முடிந்துவிட்டது. அமிதாப்பச்சன் மட்டும் இன்னும் நிலம் கொடுக்காமல் இருக்கிறார்.

அமிதாப் வீட்டிற்கு வெளியில் பேனர்
அமிதாப் வீட்டிற்கு வெளியில் பேனர்

இதனால் சாலை விரிவாக்க பணி இன்னும் முடியாமல் இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் சர்வேயர் இன்னும் நிலத்தை அளந்து கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் இப்பிரச்னை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இப்பிரச்னையை இப்போது ராஜ்தாக்கரே கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.

நவநிர்மாண் சேனாவினர் இரவோடு இரவாக அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியில் மிகப்பெரிய பேனர் வைத்துள்ளனர். அதில் 'சாலையை விரிவுபடுத்தும் பணிக்கு அமிதாப் பச்சன் (பிக் B) உங்கLin பரந்த மனதை காட்டுங்கள்' (Big B show Big Heart) என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே, இன்று அக்கட்சியினர் மனீஷ் தூரி தலைமையில் அமிதாப் பச்சன் வீட்டிற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனீஷ் தூரி இது குறித்து கூறுகையில், "மாநகராட்சி நிர்வாகம் 2017-ம் ஆண்டு அமிதாப்பச்சன் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மற்ற அனைவரும் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்துவிட்ட நிலையில், அமிதாப்பச்சன் மட்டும் இன்னும் நிலம் கொடுக்காமல் இருக்கிறார்.

அமிதாப் பச்சன் வீட்டு முன்பு போராட்டம்
அமிதாப் பச்சன் வீட்டு முன்பு போராட்டம்

மாநகராட்சியின் நோட்டீசுக்கு பிரதிக்‌ஷா பதிலளிக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் பேனர் வைத்துள்ளோம். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கும்" என்று எச்சரித்தார்.

மாநகராட்சி நிர்வாகம் அமிதாப்பச்சன் வீட்டுச் சுவரை இடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு நிலத்தை கையகப்படுத்தவேண்டும் என்பதை சர்வேயர் அளந்து கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம்தான் இப்பிரச்னை குறித்து உள்ளூர் கவுன்சிலர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

மௌனம் கலைத்து, செவி சாய்க்குமா அமிதாப் தரப்பு?