Published:Updated:

Rakhi Sawant: திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் கணவனைப் பிரிகிறார் ராக்கி சாவந்த் - காரணம் என்ன?

அடில் கானுடன் ராக்கி சாவந்த்

திருமணத்தை வெளியுலகத்துக்கு அறிவித்த ஒரு மாதத்தில் தனது கணவனைப் பிரிவதாக அறிவித்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த். காரணம் என்ன?

Published:Updated:

Rakhi Sawant: திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் கணவனைப் பிரிகிறார் ராக்கி சாவந்த் - காரணம் என்ன?

திருமணத்தை வெளியுலகத்துக்கு அறிவித்த ஒரு மாதத்தில் தனது கணவனைப் பிரிவதாக அறிவித்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த். காரணம் என்ன?

அடில் கானுடன் ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அடில் கான் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ராக்கி சாவந்த் கடந்த மாதம் 16ம் தேதி முறைப்படி அறிவித்தார். அதோடு ராக்கி சாவந்த், பர்தா அணிந்து கொண்டு அடில் கானுடன் வெளியிடங்களுக்குச் சென்று வந்தார். ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது கணவரின் போனில் சிலவற்றைப் பார்த்ததாகவும், அவரின் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் தனது கணவருடன் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். ஆனால் இது நடந்து சில நாள்களில் தனது கணவரைப் பிரிவதாக ராக்கி சாவந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக நான் மீடியாவில் பேசினேன். உடனே நான் மீடியாவில் மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வருவேன் என்று அடில் சொன்னார். இப்போது என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

ராக்கி சாவந்த்
ராக்கி சாவந்த்

எனது தாயாரின் மரணத்திற்கு அடில் கான்தான் காரணம். அவருக்குச் சரியான நேரத்தில் சிகிச்சையளித்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார். எனது தாயாரை அடில்தான் கொலை செய்துவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.

அவ்வாறு சொன்னபோது கண்ணீர் விட்டு அழுதார். திருமணத்தை வெளியுலகத்துக்கு அறிவித்த ஒரு மாதத்தில் கணவரைப் பிரிவதாக ராக்கி சாவந்த் அறிவித்துள்ளார்.

ராக்கி சாவந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது கணவர் என்று கூறி ரிதேஷ் சிங் என்பவரை அறிமுகம் செய்தார். ஆனால் அவரையும் கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார்.