Published:Updated:

``நீங்கள் தந்தையாக இருக்கும்போது அதை உணர்வீர்கள்!"- ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி

ஆலியா பட், ரன்பீர் கபூர்

`` பாலிவுட் நடிகர் ரன்பீர், தந்தைக்கும் மகள்களுக்குமான அன்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தந்தையாகும்போதுதான் அதை உணர முடியும்" என்று தன் குழந்தை ரஹா (Raha) பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Published:Updated:

``நீங்கள் தந்தையாக இருக்கும்போது அதை உணர்வீர்கள்!"- ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி

`` பாலிவுட் நடிகர் ரன்பீர், தந்தைக்கும் மகள்களுக்குமான அன்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தந்தையாகும்போதுதான் அதை உணர முடியும்" என்று தன் குழந்தை ரஹா (Raha) பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

ஆலியா பட், ரன்பீர் கபூர்
பிரபல பாலிவுட் காதல் ஜோடிகளான ஆலியா பட்டும் ரன்பீர் கபூரும் கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி  திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்டமாக இந்தத் திருமணம் நடைபெற்றது.

இந்தக் கொண்டாட்டம் குறித்த பேச்சுகள் அடங்குவதற்குள் ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் "எங்கள் குழந்தை... விரைவில்" என்கிற கேப்ஷனோடு ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து தான் கர்ப்பமாகிய விஷயத்தை அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி ஆலியா பட்டிற்குப் பெண் குழந்தை பிறந்தது.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ரன்பீர் கபூர் - ஆலியா பட்

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில், "எங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த செய்தி. இதோ எங்கள் குழந்தை வந்துவிட்டது. ஒரு அற்புதமான பெண் குழந்தை அவள்! நாங்கள் அன்பு மிகுந்த பெற்றோர்களாகிவிட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்"  என்று பகிர்திருந்தார். பின்னர் தங்கள் பெண் குழந்தைக்கு ரஹா (Raha) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்தத் தருணத்தை அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகமே கொண்டாடியது.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரன்பீர், தந்தைக்கும் மகளுக்குமான அன்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தந்தையாகும்போதுதான் அதை உணர முடியும்" என்று தனது குழந்தை ரஹா (Raha) பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ரன்பீர் கபூர்-ஆலியா பட்
ரன்பீர் கபூர்-ஆலியா பட்

இதுபற்றி பேசியுள்ள அவர், "இன்று காலை விமானத்திற்குச் செல்வதற்கு முன் ஒரு 20 நிமிடம் என் குழந்தையின் முகத்தைப் பார்த்துகொண்டே இருந்தேன். அது எனக்கு புதுவித புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதனால், எங்கு சென்றாலும் நான் என் குழந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அடிக்கடி என் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொள்வேன். நீங்கள் தந்தையாக இருக்கும்போது அதை உணர்வீர்கள். அது உலகின் சிறந்த உணர்வு. அது அன்பைப் பற்றிய புதிய புரிதல்களை உண்டாக்கும். குழந்தைக்கு மொழி இல்லை, அன்பிற்கும் மொழியில்லை. அந்த அன்பை உங்களால் விவரிக்க முடியாது" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.