Published:Updated:

"என் குடும்பத்திலேயே நான்தான் முதன்முதலில் 10வது தேர்ச்சி பெற்றேன்!"- ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

"நான் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் வெறும் 53.4% மதிப்பெண் எடுத்து தேர்ச்சியானதற்கே விருந்து வைத்து விழா போலக் கொண்டாடினார்கள்." - ரன்பீர் கபூர்

"என் குடும்பத்திலேயே நான்தான் முதன்முதலில் 10வது தேர்ச்சி பெற்றேன்!"- ரன்பீர் கபூர்

"நான் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் வெறும் 53.4% மதிப்பெண் எடுத்து தேர்ச்சியானதற்கே விருந்து வைத்து விழா போலக் கொண்டாடினார்கள்." - ரன்பீர் கபூர்

Published:Updated:
ரன்பீர் கபூர்

சமீபத்தில் நடைபெற்ற ரன்பீர் - ஆலியா பட் திருமணம் பாலிவுட் திரையுலகம் சூழ கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்த, ஆலியா பட் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் குழந்தை பிறந்த பின் ஆலியா பட் எப்போதும் போல படங்களில் நடிப்பார் என்ற தகவல் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதற்கிடையே திருமணம் முடிந்த மறுநாளே ரன்பீர் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

தற்போது ரன்பீர் நடித்துள்ள 'SHAMSHERA' படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி பிரபல சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் பேசிய ரன்பீர், "என் குடும்பத்தில் 10வது தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பையன் நான்தான்" என்று கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

SHAMSHERA
SHAMSHERA

இதற்கு முன்பே இது பற்றி ரன்பீர், "எனது தந்தை 8-ம் வகுப்பிலும், எனது மாமா 9-ம் வகுப்பிலும், எனது தாத்தா 6-ம் வகுப்பிலும் தோல்வியடைந்தனர். நான்தான் என் குடும்பத்திலேயே அதிகம் படித்த நபர்" என்று கூறியிருந்தார்.

தற்போது இதை நினைவு கூர்ந்து, "என் குடும்பத்தில் 10வது தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பையன் நான்தான். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். நான் தேர்ச்சி பெறுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் வெறும் 53.4% மதிப்பெண் எடுத்து தேர்ச்சியானதற்கே விருந்து வைத்து விழா போலக் கொண்டாடினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!