பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் கடந்த 2020-ல் மறைந்தார். ரிஷி கபூர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல துறைகளில் பாலிவுட் சினிமாவில் வளம் வந்தவர். அவர் நடித்த 'சர்மாஜி நாம்கீன்' (Sharmaji Namkeen) எனும் படம் வரும் மார்ச் 31-ல் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 17 (நாளை) வெளியாகிறது.
இதையொட்டி பேசிய ரன்பீர் கபூர், "அப்பாவின் மறைவிற்குப் பிறகு அவர் ஏற்கெனவே நடித்து வந்த 'சர்மாஜி நாம்கீன்' படத்தின் மீதிக் காட்சிகளை vfx தொழில்துட்பம் மூலம் எடுக்கலாம் என்று திட்டமிட்டபோது அது சாத்தியப்படாமல் போனது. நானே எனது தந்தையின் வடிவில் நடிக்கலாம் என்று முயற்சி செய்த போதும் அதற்குமே சாத்தியமில்லாமல் போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Also Read
இவ்வாறு நடந்த பல முயற்சிகளுக்குப் பிறகு பழம்பெரும் நடிகரான பரேஷ் ராவல் இப்படத்திற்காக பணியாற்றி அதை முடித்துக் கொடுத்திருக்கிறார். என் அப்பாவின் படத்தை நல்ல முறையில் நிறைவு செய்துகொடுத்து படம் வெளியாக உதவி செய்த பரேஷ் ராவலின் இந்த உதவிக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
இப்படம் எப்போதும் என் தந்தையின் இனிமையான நினைவுகளில் ஒன்றாக இருக்கும். அவரது எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் புன்னகையைத் தரும்" என்றும் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.