Published:Updated:

"அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்"- 'சாவர்க்கர்' பயோபிக்கில் நடிக்கும் ரன்தீப் ஹூடா

சாவர்க்கர் பயோபிக்

சாவர்க்கர் வாழ்க்கை குறித்தான படத்தில் நடிக்கவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, "சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் அவருடையக் கதையை அனைவருக்கும் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்"- 'சாவர்க்கர்' பயோபிக்கில் நடிக்கும் ரன்தீப் ஹூடா

சாவர்க்கர் வாழ்க்கை குறித்தான படத்தில் நடிக்கவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, "சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் அவருடையக் கதையை அனைவருக்கும் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Published:Updated:
சாவர்க்கர் பயோபிக்

அகில பாரத இந்து மகா சபையைத் தோற்றுவித்தவரும், தேசியவாதிகளில் முக்கியமானவருமான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. இப்படம் இந்திய சுதந்திர வரலாற்றில் சொல்லப்படாத கதையாக இருக்கும் என்று தெரிவிக்கிறது படக்குழு.

இப்படத்தை ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸிலிருந்து ஆனந்த் பண்டிட், லெஜண்ட் ஸ்டுடியோவிலிருந்து சந்தீப் சிங், ரூபா பண்டிட் மற்றும் சாம் கான் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இதில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து பேசிய ரன்தீப் ஹூடா, "நமக்கு சுதந்திரம் கிடைக்க பல ஹீரோக்கள் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்படி அங்கீகரிகப்பாடாத ஹீரோக்களில் 'விநாயக் தாமோதர் சாவர்க்கர்' மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் மற்றும் விவாதிக்கப்பட்டவர். அவருடையக் கதையை அனைவருக்கும் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாவர்க்கர்
சாவர்க்கர்

இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சந்தீப் சிங், "இந்தியாவில் தனது திறமையால் மேஜிக் செய்யும் நடிகர்கள் மிகக் குறைவு, அவர்களில் ரன்தீப் ஒருவர்" என்று படத்தின் நாயகனைப் புகழ்ந்தவர், "இந்திய வரலாற்றில் வீர் சாவர்க்கரின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. ஏன் நமது வரலாற்றுப் புத்தகங்கள் வீர் சாவர்க்கரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றும் பேசியிருக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு லண்டன், மகாராஷ்டிரா மற்றும் அந்தமான் மற்றூம் நிக்கோபார் தீவுகள் எனப் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. 'Swatantra Veer Savarkar' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 2022 முதல் துவங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism