Published:Updated:

"வாழ்க்கை என்பது பிக்பாஸ் மட்டும் அல்ல", ஷமிதா ஷெட்டி உடனான பிரேக் அப் பற்றி பேசிய ராகேஷ் பாபட்

ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி

ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி உடனான பிரேக் அப் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

"வாழ்க்கை என்பது பிக்பாஸ் மட்டும் அல்ல", ஷமிதா ஷெட்டி உடனான பிரேக் அப் பற்றி பேசிய ராகேஷ் பாபட்

ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி உடனான பிரேக் அப் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி
திரையுலகில் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி. இவர் கடந்த ஆண்டு ஹிந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 15-ல் கலந்துகொண்டார்.

அதே சீசனில் ஷமிதா ஷெட்டிக்கு அறிமுகமானவர் ராகேஷ் பாபட். பிக் பாஸ் இருந்து வெளியே வந்த பின் ஷமிதா ஷெட்டியம், ராகேஷ் பாபட்டும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கின்றனர். அந்த ஆல்பம் வெளியாவதற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அவர்களது பிரிவு குறித்து ஷமிதா ஷெட்டி, சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியது, “இதைத் தெளிவுபடுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நானும் ராகேஷும் தற்போது ஒன்றாக இல்லை. எங்களது இசை ஆல்பத்திற்கு உங்களது அன்பையும் ஆதரவையும் கொடுத்ததற்கு நன்றி என்றும் தொடர்ந்து உங்களது அன்பைக் கொடுங்கள்” என்றும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி
ராகேஷ் பாபட், ஷமிதா ஷெட்டி

இதனை தொடர்ந்து ராகேஷ் பாபட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது என்னுடைய தனிபட்ட விஷயம், இதை நான் உலகிற்கு பகிர விரும்பவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனிடையே, தற்போது ‘Bollywood Bubble’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவரும் தங்களது பிரிவை பற்றி மீண்டும் பேசியிருக்கின்றனர். ஷமிதா கூறுகையில் எங்களது பிரிவை எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து ராகேஷ் கூறுகையில் “உண்மையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. பல வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக என்னைத் தொடர்பு கொண்டார்கள். இறுதியாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் எதார்த்தமாகத்தான் சந்தித்துக் கொண்டோம். இது திட்டமிட்டு செய்தது அல்ல. எங்கள் இருவருக்குமான பிரேக் அப் குறித்து நான் பொது வெளியில் எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் சொந்த வாழ்வைப் பற்றி யாரிடமும் பகிந்துக்கொள்ள விரும்பாதவன். இது பற்றி பேசவும் எனக்கு விருப்பம் இல்லை. பிக்பாஸில் மட்டுமே எங்கள் இருவரையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை என்பது பிக்பாஸ் மட்டும் அல்ல” என்று அவர் கூறியிருக்கிறார்.