Published:Updated:

பாலிவுட்டில் மூன்றாவது படம்... ரன்பீர் கபூரின் நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா! இயக்குநர் யார் தெரியுமா?

ராஷ்மிகா மந்தனா

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் படிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் மூன்றாவது படம்... ரன்பீர் கபூரின் நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா! இயக்குநர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் படிக்கவுள்ளார்.

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். இவர் அண்மையில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த 'புஷ்பா' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஷ்மிகா இதற்கு முன்னரே 'மிஷன் மஜ்னு' மற்றும் 'குட்பை' உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில், பாலிவுட்டில் இது அவருக்கு மூன்றாவது படமாக இருக்கப்போகிறது.

ராஷ்மிகா
ராஷ்மிகா

இப்படத்தை 'அர்ஜுன் ரெட்டி' எடுத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளார். 'அர்ஜுன்' ரெட்டி படத்தை இவரே அதை இந்தியில் ஷாகித் கபூரை வைத்து 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா, ரன்பீர் நடிக்கும் 'அனிமல்' படத்தை பூஷன் குமார், கிருஷ்ணன் குமாரின் டீ-சீரிஸ், பிரணாய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் முராட் கேட்டணியின் சினி 1 ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல் போன்ற முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.