Published:Updated:

இரண்டு மாதத்தில் முடிவுக்கு வந்ததா காதல்; நடிகை சுஷ்மிதா சென் - லலித் மோடி இடையே `பிரேக் அப்'?

லலித் மோடி - சுஷ்மிதா சென்

நடிகை சுஷ்மிதா மற்றும் லலித் மோடி இடையியே பிரிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

இரண்டு மாதத்தில் முடிவுக்கு வந்ததா காதல்; நடிகை சுஷ்மிதா சென் - லலித் மோடி இடையே `பிரேக் அப்'?

நடிகை சுஷ்மிதா மற்றும் லலித் மோடி இடையியே பிரிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

Published:Updated:
லலித் மோடி - சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. லலித் மோடி கடந்த ஜூலை மாதம் திடீரென தனக்கும் நடிகை சுஷ்மிதா சென்னுக்கும் இடையே உறவு இருப்பதாகக் கூறி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இரண்டு பேரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களையும் பகிர்ந்தார். சுஷ்மிதா சென்னும் இதனை மறுக்கவில்லை. ஆமோதிக்கவே செய்தார். சுஷ்மிதா சென் லலித் மோடியைக் காதலிக்கும் முன்பு ரோஹ்மன் என்பவரை காதலித்து வந்தார்.

லலித் மோடியின் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம்
லலித் மோடியின் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம்

அவரைப் பிரிந்த பிறகுதான் லலித் மோடி சுஷ்மிதா சென் வாழ்க்கையில் வந்தார். ஆனால் லலித் மோடி வந்த பிறகும் சுஷ்மிதா சென் தொடர்ந்து தனது பழைய காதலன் ரோஹ்மனுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சுஷ்மிதா சென் தனது தாயாரின் பிறந்த நாளை தனது முன்னாள் காதலன் ரோஹ்மனுடன் சேர்ந்தே கொண்டாடினார். அதோடு ரோஹ்மனுடன் ஷாப்பிங்கும் சென்றார்.

சுஷ்மிதா சென் ரோஹ்மன்
சுஷ்மிதா சென் ரோஹ்மன்
ஏற்கெனவே இருந்த படம்
ஏற்கெனவே இருந்த படம்

ரோஹ்மன் சுஷ்மிதா சென் மகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். புதிய திருப்பமாக சுஷ்மிதா சென் மற்றும் லலித் மோடி இடையே பிரேக் அப் ஏற்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படத்தை லலித் மோடி நீக்கிவிட்டார். அதோடு ஐபிஎல் நிறுவனர் என்று கூறி தனது படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இருவரும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.