Published:Updated:

ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!

கங்கணா, சுஷாந்த, ரியா
News
கங்கணா, சுஷாந்த, ரியா

"சுஷாந்தை ஏன் கொன்றீர்கள் ரியா?" என்ற கேள்வியை மட்டும்தான் இன்னும் வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால், தீர்ப்பை எழுதியாயிற்று. சுஷாந்தின் ஆத்மா சாந்தியடைந்ததாய் ஆனந்தப்பட்டும் முடித்தாயிற்று.

சுஷாந்த் சிங்கின் தற்கொலை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. வட இந்திய ஊடகங்களின் 24*7 ப்ரைம் டைம் கவரேஜ் இதற்குத் தரப்பட்டதில், சீன ஊடுருவல் பிரச்னை, ஜிடிபி வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு போன்ற செய்திகள் புறக்கணிப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ரேகாவுக்கு சூனியக்காரி, கொலையாளி எனப் பட்டம் கட்டிய வட இந்திய மீடியா, இம்முறை இலக்கு வைத்தது ரியா சக்ரபோர்த்திமீது! வட இந்திய மீடியாக்களின் இந்த தீர்ப்பு எழுதும் அத்துமீறலைப் பார்த்து பல பிரபலங்களும் #StopMediaCircus என குரல்கொடுத்துவருகின்றனர்.

சுஷாந்த் சிங்கின் தற்கொலை பல இந்திய மீடியாக்களின் ப்ரைம் டைம் செய்தியாக ('வாட்ச் இட் ஆப்டர் தி பிரேக்'குடன்தான்) மாறியிருக்கிறது. 'மீடியா டிரெயல்' என்ற வார்த்தைக்கு அகராதியைப் புரட்டவேண்டிய அவசியத்தைக் கொடுக்காமல், அதன் வாழும் சாட்சியாக இன்று சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் செயல்கள் மாறியிருக்கின்றன.

ரியா - சுஷாந்த்
ரியா - சுஷாந்த்

"சுஷாந்தை ஏன் கொன்றீர்கள் ரியா?" என்ற கேள்வியை மட்டும்தான் இன்னும் வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால், தீர்ப்பை எழுதியாயிற்று. சுஷாந்தின் ஆத்மா சாந்தியடைந்ததாய் ஆனந்தப்பட்டும் முடித்தாயிற்று. சுஷாந்த் வழக்கு தொடர்பான விவாதம் ஒன்றில், ஜிடிபி பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை எனக் கேட்ட ஒருவரிடம், அந்த நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர், 'முக்கியமான பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்பாதீர்கள்' எனப் பதில் சொல்கிறார். 'எது இங்கே முக்கியம்?' என ஒரு நிமிடம் தலைசுற்றவே செய்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரியா சக்ரபோர்த்தி நிரபராதி என்பது இங்கே வாதமல்ல. காரணம், அதைச் சொல்லவும் இங்கே நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மூன்று நாள் விசாரணைக்கு ரியா வந்தபோதுதான் எண்ணற்ற மைக்குகள் அவரைத் துளைத்தெடுத்தன. சமூக இடைவெளி விதிமுறைகள் காற்றில் பறந்தன. 24 மணி நேரமும் கேமராக்கள் அந்த ஏரியாவிலேயே கூடாரம் அமைத்தன. ரியாவிடம் ஒரு வார்த்தையையாவது வாங்கிவிட்டால் ஒரு வாரம் கன்டென்ட் என்கிற ரீதியில்தான் மீடியாக்கள் அன்று வேலை பார்த்தன எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கூடவே, சஞ்சய் தத், சல்மான் கான் போன்றவர்கள் குற்றம்சாட்டப்பட்டு அழைத்து வரப்பட்டபோது அவர்களை இதே மீடியாக்கள் எப்படி நடத்தின என்பதை ஒப்பிட்டு மீம்களும் பகிரப்பட்டன...

கங்கனா - சுஷாந்த்
கங்கனா - சுஷாந்த்

இதனிடையே, மேல்பார்வைக்கு கங்கனாவின் கருத்துகளும் துணிச்சலும் அவரை அதிகாரத்திற்கு அஞ்சாத போராளியாக, பெண்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்ணியவாதியாக முன்னிறுத்துகின்றன. ஆனால் கொஞ்சம் ஆராய்ந்தால்?

'தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவேண்டும்' என கங்கனா சொல்வதில் நியாயம் இருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவையும் சமூகத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பதுதான் பெரிய பிரச்னை. 'இங்கே பலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் பைலட்களாகவும் ஆகமுடியாமல் போவதற்கு முக்கியக் காரணம் இட ஒதுக்கீடுதான். இதனால்தான் பலர் அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். நெப்போட்டிஸமும் இட ஒதுக்கீடும் ஒன்றுதான். இட ஒதுக்கீடே இனி வேண்டாமே' எனச் சில வாரங்களுக்கு முன் சொன்னார் கங்கனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு எதிர்வினைகள் பலமாக வர, 'சாதியப் படிநிலையை இப்போது யாரும் கடைப்பிடிப்பதே இல்லை. இந்திய நகரங்களும் கிராமங்களும் சாதியிடமிருந்து விலகிவிட்டன. சட்டத்தில் மட்டும்தான் சாதி இருக்கிறது இட ஒதுக்கீட்டின் வழியே' என்றார். அதன்பின்னும் சளைக்காமல், 'சாதி அவரவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது; அடையாளத்தை அல்ல. என் போர்க்குணம் என் ஷத்திரிய ரத்தத்திலிருந்து வந்தது' எனவும் சொன்னார். நிஜத்தில் போராளியா கங்கனா?

- பல்வேறு கோணங்களில் அலசும் ஆனந்த விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > மீடியா பசிக்கு இரையா ரியா? https://bit.ly/2FDeLHV

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV