Published:Updated:

Salman Khan: பாதுகாப்புப் படையினரைத் தாண்டி அருகில் வந்த சிறுவன் - ஆரத்தழுவிய சல்மான் கான்!

சிறுவனுடன் சல்மான் கான்

மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரை விலக்கிக்கொண்டு அருகில் ஓடிவந்த சிறுவனைக் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினார் நடிகர் சல்மான் கான்.

Published:Updated:

Salman Khan: பாதுகாப்புப் படையினரைத் தாண்டி அருகில் வந்த சிறுவன் - ஆரத்தழுவிய சல்மான் கான்!

மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரை விலக்கிக்கொண்டு அருகில் ஓடிவந்த சிறுவனைக் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினார் நடிகர் சல்மான் கான்.

சிறுவனுடன் சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் எப்போதும் குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தக்கூடியவர். எனவேதான் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு அவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் நிதியுதவி செய்து வருகிறார்.

பொதுவாகவே சல்மான் கான் எப்போதும் வெளியில் செல்லும் போது பலத்த பாதுகாப்புடன் செல்வதுதான் வழக்கம். அவரை சுற்றி பாதுகாவலர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் என்பவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். எனவே மும்பை போலீஸாரும் சல்மான் கானின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். நேற்று இரவு அவர் துபாயில் நடக்க இருக்கும் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.

சல்மான் கான்
சல்மான் கான்

அப்போது அவர் பலத்த பாதுகாப்புடன் மும்பை விமான நிலையத்திற்குள் நுழைந்தார். விமான நிலையத்திற்குள் அவர் செல்லும் போது ஒரு சிறுவன் தன்னை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதைக் கண்டார். உடனே பாதுகாப்புப் படையினரை விலக்கிக்கொண்டு சிறுவனுக்குக் கையசைத்தார். உடனே சிறுவன் ஓடிவந்து சல்மான் கானைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். சல்மான் கானும் சிறுவனை சில விநாடிகள் கட்டிப்பிடித்துவிட்டு பின்னர் விமான நிலையத்திற்குள் சென்றார்.

இந்த நிகழ்வைப் பார்த்த பலரும் 'கிக்' படத்தின் குறிப்பிட்ட காட்சியை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 'கிக் 2' படம் எப்போது வரும் என்றும் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

எது எப்படியோ, சல்மான் கான் விமான நிலையத்தில் சிறுவனைக் கட்டிப்பிடித்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதனைப் பார்த்த பலரும் சல்மான் கானை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சல்மான் கான்
சல்மான் கான்

சமீபத்தில் சல்மான் கான் அளித்திருந்த பேட்டியில், "தயாரிப்பாளர் கரண் ஜோஹரைப்போன்று திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் அது எளிதான காரியம் இல்லை" என்றும் சொன்னது குறிப்பிடத்தக்கது.