Published:Updated:

பிறந்தநாளை மருமகனோடு கொண்டாடிய சல்மான் கான்; நள்ளிரவில் வந்து ஆச்சரியம் கொடுத்த ஷாருக் கான்!

பிறந்தநாளுக்கு வந்த ஷாருக்கான்

நடிகர் சல்மான் கான் தனது 56வது பிறந்தநாளை பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

பிறந்தநாளை மருமகனோடு கொண்டாடிய சல்மான் கான்; நள்ளிரவில் வந்து ஆச்சரியம் கொடுத்த ஷாருக் கான்!

நடிகர் சல்மான் கான் தனது 56வது பிறந்தநாளை பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

Published:Updated:
பிறந்தநாளுக்கு வந்த ஷாருக்கான்

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 56வது பிறந்தநாள். இதை நேற்று இரவே பாலிவுட் நட்சத்திரங்களுடன் சேர்ந்து கொண்டாடினார் சல்மான். அவரின் சகோதரி அர்பிதா கான் சர்மாவின் மகன் அயத் சர்மாவுக்கு நேற்று பிறந்தநாளாகும். எனவே இரண்டு பேரின் பிறந்தநாளையும் ஒரே நேரத்தில் கொண்டாட சல்மான் கான் முடிவு செய்து ஏற்பாடு செய்திருந்தார். பிறந்தநாளையொட்டி சிறப்புப் பார்ட்டிக்கும் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

சல்மான் பிறந்தநாளுக்கு வருகை தந்த கார்த்திக் ஆர்யன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே
சல்மான் பிறந்தநாளுக்கு வருகை தந்த கார்த்திக் ஆர்யன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே

இந்தப் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சல்மான் கானும், அவர் மருமகனும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். விழாவில் சல்மான் கான் கறுப்பு ஆடை அணிந்து காணப்பட்டார். சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு வெளியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.

சல்மான் கான் பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து சிறிய கேக் ஒன்றை வெட்டி அவர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்த நாளுக்கு நடிகர் ஷாருக்கான் நள்ளிரவில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வழக்கமாகவே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஷாருக்கான் நள்ளிரவில் வருவதுதான் வழக்கம். ஷாருக் கானை சல்மான் கான் வீட்டின் வாசல்வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். சல்மான் கானும், ஷாருக் கானும் ஒரே கலரில் ஆடை அணிந்திருந்தனர். சல்மான் கானின் 'டைகர் 3' படத்தில் ஷாருக் கான் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஷாருக் கான், சல்மான் கான்
ஷாருக் கான், சல்மான் கான்

சல்மான் கானின் பிறந்தநாளையொட்டி அவர் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். வழக்கமாக சல்மான் கான் மும்பைக்கு வெளியில் இருக்கும் பன்வெல் பண்ணை வீட்டில்தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். இம்முறை மும்பை வீட்டில் கொண்டாடியிருக்கிறார். 1988-ம் ஆண்டு பாலிவுட்டுக்கு அறிமுகமான சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்துவந்தார். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதன் பிறகு பல நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கப்பட்டாலும் அவற்றை சல்மான் கான் வெளியுலகத்துக்கு வெளிப்படையாக அறிவித்துக்கொண்டதில்லை.