Published:Updated:

மும்பை: பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட சென்ற சல்மான் கானைக் கடித்த பாம்பு... என்ன நடந்தது?

சல்மான் கான்
News
சல்மான் கான்

சல்மான் கான் உடனே அருகில் உள்ள காமோட்டே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

நடிகர் சல்மான் கானுக்கு மும்பைக்கு வெளியில் பன்வெல் என்ற இடத்தில் பண்ணை வீடு இருக்கிறது. ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் உடனே அந்த பண்ணை வீட்டிற்குச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். தனது நண்பர்களை பண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதையும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. அதோடு ஓய்வாக இருக்கும்போது தானே விவசாயமும் செய்கிறார். தனது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சல்மான் கான் தனது பண்ணை வீட்டிலேயே கொண்டாடுவார்.

அவருக்கு 27-ம் தேதி (நாளை) 56வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடுவதற்காக சனிக்கிழமையே அங்கு வந்துவிட்டார். பண்ணை வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்த புல்வெளியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. ஆனால், அந்த பாம்பு விஷமில்லாதது என்று சொல்லப்படுகிறது.

சல்மான் கான்
சல்மான் கான்

சல்மான் கான் உடனே அருகில் உள்ள காமோட்டே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து டிஸ்சார்ஜ் செய்தனர். அவர் மீண்டும் பண்ணை வீட்டிற்குச் சென்று தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

27ம் தேதி பிறந்தநாள் பார்ட்டிக்கு முக்கிய நண்பர்களுக்கு சல்மான் கான் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திட்டமிட்டபடி பிறந்தநாள் பார்ட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தி கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாக போஸ்ட் செய்து வருகின்றனர். சல்மான் கானின் நண்பர்கள் பலரும் போனில் நலம் விசாரித்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சல்மான் கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார். இதில் சல்மான் கான் தொடர்பான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது கத்ரீனாவின் வருகைக்காக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.