Published:Updated:

"தென் இந்தியப் படங்கள் இங்கு ஹிட்டாகின்றன, இந்திப் படங்கள் அங்கு ஓடுவதில்லை"- சல்மான் கான் ஆதங்கம்!

சல்மான் கான் ( ANI )

"நான் அவர்கள் விரும்பும் ஹீரோயிச படங்களில் மட்டுமே நடிக்கிறேன், இருந்தபோதும் என்னை 'கிளிசே' ஆக எடுத்து கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது." - சல்மான் கான்

"தென் இந்தியப் படங்கள் இங்கு ஹிட்டாகின்றன, இந்திப் படங்கள் அங்கு ஓடுவதில்லை"- சல்மான் கான் ஆதங்கம்!

"நான் அவர்கள் விரும்பும் ஹீரோயிச படங்களில் மட்டுமே நடிக்கிறேன், இருந்தபோதும் என்னை 'கிளிசே' ஆக எடுத்து கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது." - சல்மான் கான்

Published:Updated:
சல்மான் கான் ( ANI )
சல்மான் கான்தான் துபாயில் நடக்கவிருக்கும் 'IIFA விருதுகள் 2022' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த IIFA விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி சினிமாவோடு தென்னக மொழிகளின் படங்களை ஒப்பிட்டுப் பேசிய சல்மான் கான் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

சல்மான் கான் சிரஞ்சீவி நடிக்கும் 'Godfather' படத்தில் ஸ்பெஷல் ரோல் ஒன்றில் நடித்திருக்கிறார். சிரஞ்சீவி உடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் அவர் தன்னுடைய நீண்டகால நண்பர் என்றும் புகழ்ந்தவர், RRR படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சிறப்பாக நடித்திருந்ததைக் குறிப்பிட்டார்.

"நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் நன்றாக நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நம்முடைய படங்கள் அங்கு (தென் இந்தியா) ஏன் ஓடுவதில்லை எனத் தெரியவில்லை, அவர்களது படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. அவர்கள் (தென் இந்தியத் திரையுலகம்) ஹீரோயிசத்தை நம்புகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஹீரோயிசம் தேவைப்படுகிறது. இங்கு ஒன்றிரண்டு நபர்களைத் தவிர ஹீரோயிச படங்கள் யாரும் எடுப்பதில்லை. மிகப்பெரிய ஹீரோயிச படங்கள் எடுப்பதை நாம் மீண்டும் தொடங்க வேண்டும். நான் அது போலான படங்களில் மட்டுமே நடிக்கிறேன், இருந்தபோதும் அவர்கள் என்னை 'கிளிசே' (வழமை) ஆக எடுத்து கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

சல்மான் கான்
சல்மான் கான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹீரோயிசம் எப்போதும் வேலை செய்யும், அதுதான் தியேட்டருக்கு வருபவர்களுக்கு முக்கியம். தென் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அவர்கள் படம் எடுக்கும் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது. தென்னகத்தில் எழுத்தாளர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அழகான கான்செப்ட் பிடிக்கிறார்கள். சின்ன படங்களாக அவர்கள் எடுத்தாலும் மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்க்க விரும்புகிறார்கள். இங்கு என்ன நடக்கிறதென்றால் இந்தியா என்பது மும்பையில் ஒரு மூலையில் ஆரம்பித்து அந்தேரி உடன் முடிவதாக நினைத்து கொள்கிறார்கள். உண்மையான இந்தியா அந்தேரியைத் தாண்டி மும்பையைத் தாண்டிதான் தொடங்குகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் என்னிடம் வரும் போது என்னை ஹிந்தி படங்களுக்காவே அணுகுகின்றனர். தமிழ் அல்லது தெலுங்கு படத்திற்காக என்னிடம் வருவதில்லை" என மனம் திறந்து பேசியுள்ளார் சல்மான் கான். அவரது 'Tiger 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. நல்ல கதைகள் பெரிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தால் ஓடிடியில் நடிக்க ரெடியாக இருப்பதாக சல்மான் கான் தெரிவிக்கிறார்.

சல்மான் கான்
சல்மான் கான்

துபாயில் நடக்கும் IIFA விருதுகள் விழாவில் சல்மான்கான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு பர்ஃபார்மன்ஸ் ஒன்றிலும் பங்கேற்க இருக்கிறாராம். நிகழ்ச்சிகளுக்கு சல்மான் கான் தொகுப்பாளராகப் பங்கேற்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. பிக் பாஸ் இந்தி சீசனில் அவர்தான் ஆஸ்தான தொகுப்பாளர். பல முறை பங்கேற்பாளர்களிடம் அவர் வெடித்துப் பேசியது வைரலாகி இருக்கின்றன.

"நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்களாகவும், நகைச்சுவைத் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்" என்கிறார் சல்மான் கான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism