Published:Updated:

கத்ரீனா கைஃப் திருமணப் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற சல்மான் கான் பாதுகாவலர்... பின்னணி என்ன?

மும்பை விமான நிலையத்தில் கத்ரீனா
News
மும்பை விமான நிலையத்தில் கத்ரீனா

நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் ராஜஸ்தானில் நடக்க இருக்கும் நடிகை கத்ரீனா கைஃப் திருமண பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றுள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷல் திருமணம் ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழைமையான கோட்டையில் வரும் 9ம் தேதி நடக்கிறது. இத்திருமணத்திற்கு கத்ரீனா கைஃப் தனது வருங்கால கணவர் விக்கி கௌஷலுடன் மும்பையில் இருந்து 6ம் தேதி புறப்பட்டு சென்றார். ராஜஸ்தானில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலிவுட் முக்கிய பிரமுகர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கத்ரீனா கைஃப் உறுதியாக இருக்கிறார். இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து பிரத்யேகமாக 100 பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதோடு உள்ளூர் போலீஸார் 10 பேரும் அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாவலரோடு சல்மான்
பாதுகாவலரோடு சல்மான்

மேலும் இத்திருமண பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடிகர் சல்மான் கானின் பர்சனல் பாதுகாவலர் குர்மீத் சிங் (ஷேரா) பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் டைகர் செக்யூரிட்டி என்ற பாதுகாப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். திருமணத்திற்கு சல்மான் கானையோ அல்லது அவரது குடும்பத்தையோ கத்ரீனா கைஃப் அழைக்கவில்லை. கத்ரீனா கைஃப் சல்மான் கான் குடும்பத்துடன் நெருக்கமானவர் என்ற நிலையில், அவரையோ அவரின் குடும்பத்தையோ அழைக்காதது பாலிவுட்டில் பேசுபொருளாகி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் இருக்கும் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு வெறும் 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரகசிய கோடு அடங்கிய திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகள் இன்று (7ம் தேதி) தொடங்கி 9ம் தேதி முடிகிறது. 9ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த கத்ரீனா கைஃப் திட்டமிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz