Published:Updated:

`நுரையீரல் புற்றுநோய்; ஸ்டேஜ் 3’ சினிமாவிலிருந்து விலகுவதாக சஞ்சய் தத் அறிவிப்பு

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதால், தற்காலிகமாக சினிமாத் துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், உடல்நிலை சீராகி நேற்று முன் தினம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இவர் வீட்டுக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

அவருக்கு கொரோனா இல்லை எனக் கூறப்பட்டாலும் வேறு சில மருத்துவ பிரச்னைகள் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், ``வணக்கம் நண்பர்களே. மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான், என் பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனவே, என் நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ அச்சமடையவோ தேவையில்லை. உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துகளோடு விரைவில் மீண்டும் வருவேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.

Vikatan

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பாதிப்பு மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் உயர் சிகிச்சைக்காக உடனடியாக அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த மோசமான செய்தியைத் தன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க முடியாமல் அவர் முற்றிலும் உடைந்துவிட்டதாகப் பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

இந்தச் செய்தியை அறிந்தவுடன் பல முன்னணி நடிகர்களும் சஞ்சய் தத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். தான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் நடிப்பில் சதக் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு