Published:Updated:

KGF 2 :``ஹிந்தி படங்கள் ஹீரோயிசத்தை மறந்தன; தென்னிந்திய படங்கள் மறக்கவில்லை'' - நடிகர் சஞ்சய் தத்!

KGF 2 நடிகர் சஞ்சய் தத்

தென்னிந்திய இன்ஸ்டஸ்ட்ரியில் தாளில் இருக்கும் ஸ்க்ரிப்டை பார்க்கிறார்கள், இங்கு எத்தனை இலக்கத்தில் திரும்ப கிடைக்கும் என பார்க்கிறார்கள்

KGF 2 :``ஹிந்தி படங்கள் ஹீரோயிசத்தை மறந்தன; தென்னிந்திய படங்கள் மறக்கவில்லை'' - நடிகர் சஞ்சய் தத்!

தென்னிந்திய இன்ஸ்டஸ்ட்ரியில் தாளில் இருக்கும் ஸ்க்ரிப்டை பார்க்கிறார்கள், இங்கு எத்தனை இலக்கத்தில் திரும்ப கிடைக்கும் என பார்க்கிறார்கள்

Published:Updated:
KGF 2 நடிகர் சஞ்சய் தத்

KGF 2 படத்தில் வில்லனாக நடித்திருந்த சஞ்சய் தத், பாலிவுட் படங்கள் எந்த விஷயத்தில் தென்னிந்திய படங்களில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். பான் இந்திய அளவில் உருவான பாகுபலி, புஷ்பா, RRR போன்ற தெலுங்கு படங்கள் ஹிந்தியில் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய பிறகே விழித்திருக்கிறது, பாலிவுட். இப்போது ஒவ்வொருவராக அதனை பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான சஞ்சய் தத், "ஹிந்தி படங்கள் வாழ்க்கையை விட பெரிதான ஹீரோயிசத்தை மறந்து விட்டன என நான் நினைக்கிறேன். ஆனால் தென்னிந்திய படங்கள் ஹீரோயிசத்தை மறக்கவில்லை. நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள், ரொமான்ஸ் காமெடி படங்கள் மோசமானவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நமக்கு பெரியளவிலான ஆடியன்ஸ் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டோம்."

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

"ஹிந்தி படங்களில் பழைய ட்ரெண்ட் திரும்பி வரவேண்டும். முன்பு தனிப்பட்ட தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் இருந்தனர். இப்போது ஸ்டூடியோக்கள் அந்த முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டன. எஸ்.எஸ்.ராஜமௌலியை முழுமையாக நம்புகிற தயாரிப்பாளர்கள் போலவே நமக்கும் முன்பு குல்சன் ராய், யாஷ் சோப்ரா, சுபாஷ் கை, யாஷ் ஜோகர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தனர். அவர்கள் உருவாக்கிய படங்களை பாருங்கள். தென்னிந்திய இன்ஸ்டஸ்ட்ரியில் தாளில் இருக்கும் ஸ்க்ரிப்டை பார்க்கிறார்கள், இங்கு எத்தனை இலக்கத்தில் திரும்ப கிடைக்கும் என பார்க்கிறார்கள்" என்று தெரிவித்து இருக்கிறார்.