Published:Updated:

"என் இறுதி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்!"- புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத்

சஞ்சய் தத்

"ரன்பீர் கபூர், யாஷ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருக்கும் இந்த இந்தியத் திரைத்துறையில் நானும் ஓர் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமையளிப்பதாக இருக்கிறது!" - சஞ்சய் தத்

'கே.ஜி.எஃப் 2' படத்தில் வில்லனாக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் (62), கடந்த 2020-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்து தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் அவர் நடித்த கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் மார்ச் 14-ல் வெளியாகிறது. இதையொட்டி சஞ்சய் தத், "நான் கலைஞன். கடவுள் அனுமதித்தால் நான் என் இறுதி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்" என உருக்கமாகப் பேசியவர்,

 சஞ்சய் தத்
சஞ்சய் தத்

"நான் செய்யும் வேலையை விரும்பிச் செய்கிறேன். நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. 45 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் இருக்கிறேன். இன்று நிறைய திறமையானவர்கள் இந்தத் துறையில் வளர்ந்து வருகிறார்கள்" என்றும் கூறினார்.

ரன்பீர் கபூர், யாஷ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் பற்றிக் கூறிய அவர், "என் கண் முன்னால் இவர்கள் வளர்வதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. அவர்கள் இருக்கும் இந்த இந்தியத் திரைத்துறையில் நானும் ஓர் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமையளிப்பதாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.