Published:Updated:

Shamshera சர்ச்சை: "படத்தைப் பார்க்காமலே தவறாகப் பேசுவது வேதனை அளிக்கிறது!"- சஞ்சய் தத்

சஞ்சய் தத், ரன்பீர் கபூர்

சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா' படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் இது பற்றி நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Shamshera சர்ச்சை: "படத்தைப் பார்க்காமலே தவறாகப் பேசுவது வேதனை அளிக்கிறது!"- சஞ்சய் தத்

சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா' படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் இது பற்றி நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
சஞ்சய் தத், ரன்பீர் கபூர்

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடுவதில்லை. இந்தச் சூழலில் அதிக பொருட்செலவில் இயக்குநர் கரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் 'ஷம்ஷேரா'. ரன்பீர் கபூர் கடைசியாக 2018-ல் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'சஞ்சு' என்னும் படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பின் தற்போது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.

இதில் சஞ்சய் தத் வில்லனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஜூலை 22ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இப்படத்திற்கான திரையரங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ரன்பீர் கபூரின் படங்களிலேயே மிகவும் குறைந்த முதல் நாள் வசூல் இப்படத்திற்குத்தான் என்று கூறப்படுகிறது. இது பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத், "வியர்வையையும் கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது எங்களின் கனவுப் படம். எல்லா படங்களும் பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன. அப்படித்தான் இப்படத்தையும் கடினமாக உழைத்து எடுத்தோம். ஆனால் நிறையப் பேர் இப்படத்தைக் குறை கூறுகிறார்கள். அதில் பலர் படத்தைப் பார்க்காமலே படத்தைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள். இது போன்ற விஷயங்கள் வருத்தமளிக்கின்றன. கடினமாகவும் அர்ப்பணிப்புடனும் நடிப்பவர் ரன்பீர். இப்படிக் கடின உழைப்பில் உருவான படத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.