Published:Updated:

"ஷாருக்கான், அக்‌ஷய் குமார் தோல்வி அடைந்தனர். எனக்கு வெற்றி!"- ரியாலிட்டி ஷோ குறித்து கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

ரியாலிட்டி ஷோ நடத்துவதில் தான் சூப்பர் ஸ்டார் என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

"ஷாருக்கான், அக்‌ஷய் குமார் தோல்வி அடைந்தனர். எனக்கு வெற்றி!"- ரியாலிட்டி ஷோ குறித்து கங்கனா ரணாவத்

ரியாலிட்டி ஷோ நடத்துவதில் தான் சூப்பர் ஸ்டார் என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதனை பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். ஓடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வரும் லாக் அப் ரியாலிட்டி ஷோவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ரியாலிட்டி ஷோ நடத்துவதில் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது...

"பாலிவுட் நடிகர்கள் பலர் இதற்கு முன்பு ரியாலிட்டி ஷோ நடத்த முயன்றனர். நடிகர் ஷாருக்கான், அக்‌ஷய்குமார், பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங் போன்ற நடிப்பில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்கள் ரியாலிட்டி ஷோ நடத்தினர். ஆனால் அவர்களால் வெற்றிகரமாக ஷோவை நடத்த முடியவில்லை. இதுவரை அமிதாப் பச்சன், சல்மான் கான் மட்டுமே ரியாலிட்டி ஷோ நடத்துவதில் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நானும் இணைந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். நான் ஒரு சூப்பர் ஸ்டார் ஹோஸ்ட்!

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பொறாமை பிடித்தத் திரைப்பட மாஃபியா என்னையும், எனது நிகழ்ச்சியையும் இழிவுபடுத்த எல்லாவற்றையும் செய்கிறது. அதனால்தான் நானும் தேவையானதைச் செய்யவேண்டியிருக்கிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. எல்லோருக்காகவும் என்னால் எழுந்து நிற்கும் போது எனக்காகவும் அது முடியும். இந்தத் தலைமுறையின் ஒரே வெற்றிகரமான தொகுப்பாளராக இருப்பது அற்புதமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

லாக் அப் ரியாலிட்டி ஷோ சமீபத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதே சமயம், கங்கனா ரணாவத் தற்பெருமை பேசி வருவதாகவும் நெட்டீசன்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism