Published:Updated:

எகிப்து பயணம், பண பரிவர்த்தனையில் சிக்கல்... ஷாருக்கான் செய்த மேஜிக்கும் கிடைத்த அன்பளிப்பும்!

ஷாருக்கான் (Shah Rukh Khan)

வைரலான ஷாருக்கானின் கடிதம். எகிப்து பயணத்துக்காக முன்பதிவு செய்ய முயன்ற அஸ்வினி தேஷ்பாண்டே என்னும் இந்தியப் பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

எகிப்து பயணம், பண பரிவர்த்தனையில் சிக்கல்... ஷாருக்கான் செய்த மேஜிக்கும் கிடைத்த அன்பளிப்பும்!

வைரலான ஷாருக்கானின் கடிதம். எகிப்து பயணத்துக்காக முன்பதிவு செய்ய முயன்ற அஸ்வினி தேஷ்பாண்டே என்னும் இந்தியப் பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

Published:Updated:
ஷாருக்கான் (Shah Rukh Khan)

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் எந்தப் படமும் கடந்த 3 ஆண்டுகளாக வெளிவரவில்லை. எனினும் அவரது ரசிகர் பட்டாளம் அண்மையில் '#WeMissyouSRK' எனும் ஹாஷ்டாகை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது எகிப்தில் உள்ள அவரது ரசிகர் ஒருவர் செய்த செயலும் அதற்குப் பதில் கடிதம் எழுதிய ஷாருக்கானின் செயலும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அஸ்வினி தேஷ்பாண்டேவின் டிவிட்
அஸ்வினி தேஷ்பாண்டேவின் டிவிட்

அஸ்வினி தேஷ்பாண்டே எனும் இந்தியப் பெண் எகிப்து செல்வதற்காக எகிப்தில் உள்ள பயண முகவர் (டிராவல் ஏஜென்ட்) ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது, பரிவர்த்தனையில் சில சிக்கல்கள் இருந்தன. இதனால் அஸ்வினி பணம் மாற்ற முடியாமல் தவித்தார். அப்போது அந்த எகிப்து ட்ராவல் ஏஜென்ட், "நீங்கள் ஷாருக்கான் நாட்டிலிருந்து வருவதால் நான் உங்களை நம்புகிறேன். உங்களுக்கு முன்பதிவு செய்கிறேன். பின்னர் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். வேறு எங்கும் இதை நான் செய்யமாட்டேன் ஷாருக்கானுக்காக இதைச் செய்கிறேன்" எனச் சொல்லியிருக்கிறார் அந்த டிராவல் ஏஜென்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அஸ்வினி தேஷ்பாண்டேவின் டிவிட்
அஸ்வினி தேஷ்பாண்டேவின் டிவிட்

பின்னர் எகிப்து சென்ற அஸ்வினி அந்த ட்ராவல் ஏஜென்டைப் பார்த்து நன்றி தெரிவித்ததோடு ஷாருக்கானின் 'SRK's Red Chillies Entertainment' நிறுவனத்திடம், ஷாருக்கானின் புகைப்படம் ஒன்றையும் அவரது மகள் பெயருடன் ஆட்டோகிராப் ஒன்றையும் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி ஷாருக்கானும் அந்த நபருக்கு அன்புடன் பதிலளித்து தன் ஆட்டோகிராஃப் உடன் கூடிய புகைப்படத்தையும், கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியிருந்தார்.

அஸ்வினி மற்றும் அவர் கணவர்
அஸ்வினி மற்றும் அவர் கணவர்

ஷாருக்கான் அனுப்பிய அந்த கடிதத்தில் "இத்தனை அன்புடன் நடந்து கொண்ட என் இந்தியருக்கு நன்றி. உங்களிடம் அன்பு மற்றும் தாராள பண்பு நிறைந்திருக்கிறது. உங்களைப் போன்ற நல்ல ஆத்மாக்கள் பெருகட்டும்" என ஷாருக்கான் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஷாருக்கானின் இந்தச் செயல் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism