Published:Updated:

மகன் ஆர்யன் கான் வருகை; நடிகர் ஷாருக்கானின் அடுத்த கட்ட திட்டம்?

ஷாருக்கான்
News
ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் வரும் 15ம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதன் காரணமாக கடந்த அக்டோபர் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஷாருக்கான் எந்தவித வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்புக்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது, கதை கேட்பு, விளம்பர படங்களில் நடிப்பது என அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டார். தற்போது அவரது மகன் சிறையில் இருந்து வந்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே வழக்கமான பணிகளில் ஈடுபட ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். தனது மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் வேலைகள் குறித்து திட்டமிடத் தெடங்கியிருக்கிறார். வரும் 15ம் தேதி ஷாருக்கான் மும்பையில் நடக்கும் பதான் படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருக்கிறார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

அவருடன் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருப்பதாக பதான் படவேலையில் ஈடுபட்டுள்ள உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். இந்த படப்பிடிப்பு 15 முதல் 20 நாட்கள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளிநாட்டு படப்பிடிப்பை தொடர ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். எந்த நாட்டில் படப்பிடிப்பை நடத்துவது என்பது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஷாருக்கான் தேதி கிடைத்த பிறகுதான் வெளிநாட்டு படப்பிடிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று படத்தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர். பதான் படத்தில் நடிகர் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது தவிர அட்லியின் அடுத்த படத்திலும் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் நயன்தாரா ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார். ஷாருக்கான் வரவுக்காக அட்லியின் படமும் நிற்கிறது. அட்லி ஷாருக்கான் இடம் பெறாத சில காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் என தகவல்கள் வெயாகியிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz