Published:Updated:

பதான்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கான் படம்; 100 நாடுகளில் 2500 திரைகளில் வெளியாகி புதிய சாதனை!

பதான்

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளில் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.

Published:Updated:

பதான்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கான் படம்; 100 நாடுகளில் 2500 திரைகளில் வெளியாகி புதிய சாதனை!

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளில் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.

பதான்
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் பதான் படம் 100 நாடுகளில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் ஏற்கெனவே ஒரு வாரத்திற்கு தேவையான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு இது போன்று இந்திய திரைப்படம் 100 நாடுகளில் வெளியானது கிடையாது. திரைப்பட தொழில் நிபுணர் தரன் ஆதர்ஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் பதான் வெளியாகிறது.

பதான்
பதான்

இந்த அளவுக்கு அதிகமான நாடுகளில் வெளியான இந்திய திரைப்படம் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். முதல் நாளில் 4 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வரை முதல் நாளில் அதிக டிக்கெட்கள் விற்பனையான முதல் ஐந்து படங்களோடு பதான் பட விற்பனையை ஒப்பிட்டுக் காட்டியுள்ள தரன் திங்கள் கிழமை மாலை வரை பதான் படத்திற்கு 3.9 லட்சம் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்திருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வரை பாகுபலி படத்திற்கு அதிகபட்சமாக முதல் நாளில் 6.50 லட்சம் டிக்கெட்கள் விற்பனையானது.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். பதான் படவெளியீட்டை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தனது வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த ரசிகர்களை தனது வீட்டு பால்கனி வழியாக பார்த்து கையசைத்து வாழ்த்துக்களை பெற்றார். மும்பையில் பதான் படத்தின் முதல் காட்சி நேற்று இரவு 12 மணிக்கு பாந்த்ரா கேலக்‌ஷி தியேட்டரில் திரையிடப்பட்டது.

Pathaan | பதான்
Pathaan | பதான்

மும்பை முழுக்க தியேட்டர்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ராட்சத பேனர்கள் வைத்தனர். முன்னதாக இந்த படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தின. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படங்களுக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம் என்று கட்சி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.