Published:Updated:

பதான் பட பாடலில் அதிக ஆபாசம்; படம் தோல்வியடையும்! நடிகர் கமால் கானின் விமர்சனத்தால் ஷாருக் அதிர்ச்சி

பதான் பட பாடல் காட்சி

பதான் படத்தின் பாடலில் அதிகப்படியான ஆபாசம் இடம் பெற்று இருப்பதாகவும், படம் தோல்வி அடையும் என்றும் நடிகர் கமால் கான் விமர்சனம் செய்துள்ளார்.

பதான் பட பாடலில் அதிக ஆபாசம்; படம் தோல்வியடையும்! நடிகர் கமால் கானின் விமர்சனத்தால் ஷாருக் அதிர்ச்சி

பதான் படத்தின் பாடலில் அதிகப்படியான ஆபாசம் இடம் பெற்று இருப்பதாகவும், படம் தோல்வி அடையும் என்றும் நடிகர் கமால் கான் விமர்சனம் செய்துள்ளார்.

Published:Updated:
பதான் பட பாடல் காட்சி
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த மாதம் 25ம் தேதி திரைக்கு வர இருக்கும் பதான் படம், திரைக்கு வரும் முன்பே வலது சாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தீபிகா படுகோனே பாடல் காட்சியில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருப்பதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பதான் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியபோது அதில் பாடல் காட்சி உட்பட சில திருத்தங்களை செய்யும்படி தணிக்கை குழு திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் சர்ச்சைக்குரிய பாடல் தொடர்ந்து படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இப்படம் குறித்து நடிகர் கமால் ஆர் கான் சோசியல் மீடியாவில் மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்

அதில் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே சந்திக்கும் என்றும், படத்தின் தலைப்பு இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதான் பட பாடல் காட்சி
பதான் பட பாடல் காட்சி

படம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்களையே கமால் கான் சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள் பதிவில், பதான் படத்தின் பாடலில் அதிக அளவு ஆபாசம் இருக்கிறது என்று உண்மையைச் சொன்னதற்காக ஷாருக்கான் என்னை கோர்ட்டிற்கு இழுக்கலாம். பாடல் குறித்து நான் தெரிவித்துள்ள விமர்சனத்தை பார்த்துவிட்டு நான் தவறாக சொல்லி இருக்கிறேனா என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் பதான் படம் தோல்வியடையும் என்பதற்கு என்னால் மூன்று காரணங்களை கூற முடியும். தவறான பெயர், ஒரே கதை மற்றும் பொது மக்களின் புறக்கணிப்பு போன்ற காரணங்களை கூறலாம்.  அவர் படத்தைப்பற்றி விமர்சிக்கவேண்டாம் என்று சொன்னால் நான் விமர்சிக்கமாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே நடிகர் சல்மான் கான் நடித்த ராதே படம் குறித்து இதே கமால் கான் மோசமாக விமர்சித்திருந்தார். இதற்காக அவர் மீது சல்மான் கான் சட்டப்படி நடவடிக்கை எடுத்தார். இப்போது ஷாருக்கானும் அதே வழியைப் பின்பற்றி கமால் கான் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.