Published:Updated:

"நானே விஜய்யின் ரசிகன்தான்!" - பீஸ்ட், KGF 2 படங்களோடு வெளியாகும் `ஜெர்ஸி' பட நாயகன் ஷாகித் கபூர்

ஷாகித் கபூர்

"அது வேறு களம், ஆக்ஷன் படம், பெரிய பட்ஜெட். எங்கள் படம் எமோஷனல் ஆனது. விளையாட்டை மையப்படுத்தியது. எல்லோருக்கும் இங்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன்." - ஷாகித் கபூர்

"நானே விஜய்யின் ரசிகன்தான்!" - பீஸ்ட், KGF 2 படங்களோடு வெளியாகும் `ஜெர்ஸி' பட நாயகன் ஷாகித் கபூர்

"அது வேறு களம், ஆக்ஷன் படம், பெரிய பட்ஜெட். எங்கள் படம் எமோஷனல் ஆனது. விளையாட்டை மையப்படுத்தியது. எல்லோருக்கும் இங்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன்." - ஷாகித் கபூர்

Published:Updated:
ஷாகித் கபூர்

'பீஸ்ட்' மற்றும் 'KGF 2' படங்கள் அடுத்தடுத்து பேன் இந்தியா அளவில் வெளியாக உள்ளன. அதே சமயத்தில் ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், நானி நடித்து தெலுங்கில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் இந்தி ரீமேக்தான் இந்தப் படம்.

இது குறித்து ஷாகித் பாலிவுட் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "வெளியிடுவதற்கு இது உகந்த நேரம் என்பதாலேயே இந்தப் படத்தை வெளியிடவுள்ளோம். வேறு காரணம் எதுவுமில்லை. அதே நேரத்தில் மற்ற இரு படக்குழுவினரும் அதே போல யோசித்திருப்பார்கள். மூன்றாவது படத்திற்கும் இடம் இருக்கும் என நினைக்கிறேன்" என்று சொல்லியவர் தன்னை விஜய் ரசிகர் என அடையாளப்படுத்தி கொள்கிறார்.

பீஸ்ட் விஜய்
பீஸ்ட் விஜய்

"நான் விஜய்யின் பெரிய ரசிகன். அவரது படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் நடனம் சிறப்பாக இருக்கும். நல்ல நடனங்கள் எனக்கு எப்போதுமே பிடிக்கும். பீஸ்ட் நிச்சயமாக மிக அற்புதமான படமாக இருக்கும். அது வேறு மார்க்கெட் என நினைக்கிறேன். இரண்டு படங்களும் மோதிக் கொள்ள இங்கு வாய்ப்பு இருக்க போவதில்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெர்ஸி
ஜெர்ஸி

மேலும், "அதே போலத்தான் KGF 2 படமும்... அதன் முதல் பாகம் மக்களுக்குப் பிடித்திருந்தது. ராக்கி பாய்க்கும் வாழ்த்துகளைச் சொல்லி கொள்கிறேன். அது வேறு களம், ஆக்ஷன் படம், பெரிய பட்ஜெட். எங்கள் படம் எமோஷனல் ஆனது. விளையாட்டை மையப்படுத்தியது. எல்லோருக்கும் இங்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன். நான்கு விடுமுறை நாள்கள் இருக்கின்றன. போதுமான திரையரங்குகள் உள்ளன. பெரிய படங்கள் ஒன்றாக வருவது நல்ல விஷயம், நான் இதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்" என்று முடித்தார். 

தெலுங்கில் ஜெர்ஸி படத்தை இயக்கிய இயக்குநர் கெளதம்தான் அதன் இந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism