Published:Updated:

ஷ்ரத்தா கபூர் புகைப்படத்துக்கு வந்த கமென்ட்; தொடர் சர்ச்சைக்கு பதிலளித்த அவரின் தந்தை!

ஷ்ரத்தா கபூர்

ஷ்ரத்தா கபூரின் பாய் ப்ரெண்ட் என சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படும் ரோஹன், புகைப்படக் கலைஞர். ஷ்ரத்தாவின் குடும்ப நண்பர்.

ஷ்ரத்தா கபூர் புகைப்படத்துக்கு வந்த கமென்ட்; தொடர் சர்ச்சைக்கு பதிலளித்த அவரின் தந்தை!

ஷ்ரத்தா கபூரின் பாய் ப்ரெண்ட் என சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படும் ரோஹன், புகைப்படக் கலைஞர். ஷ்ரத்தாவின் குடும்ப நண்பர்.

Published:Updated:
ஷ்ரத்தா கபூர்

ஷ்ரத்தா கபூர், Aashiqui 2 படத்தின் வழியாக பாலிவுட்டின் பிரபல நடிகையாக உயர்ந்தவர். தும் கி கோ என பாடல் பாலிவுட்டைக் கடந்தும் ஹிட் அடித்தது. பாஹி-2 படத்திற்குப் பிறகு திரைக்கு வராமல் இருந்தவர் தற்போது லவ் ரஞ்சனின் பெயரிடப்படாத படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கிறார். ரஞ்சனின் திருமணத்திற்கு ஆக்ரா சென்றிருந்தார். அவரது ரீசன்ட் போட்டோ ஷூட் ஒன்றின் படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் ரோஹன் ஷ்ரேஸ்தா. ஷ்ரத்தா கபூரின் பாய் ப்ரெண்ட் என சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படும் ரோஹன், புகைப்படக் கலைஞர். ஷ்ரத்தாவின் குடும்ப நண்பர்.

ரோஹன், ஷ்ரத்தாவின் படத்தைப் பகிர்ந்து பிரிட்டிஷ் நாவலாசிரியரான Frances Hodgson Burnett இன் வரிகளை கேப்ஷனாகப் பகிர்ந்திருக்கிறார். 'நீங்கள் சரியான வழியில் பார்த்தால், இந்த ஒட்டுமொத்த உலகமே பூந்தோட்டமாக தெரிவதைப் பார்க்கலாம்' என்கிற வரிகள் அவை. ஷ்ரத்தாவின் காஸ்டியூம் பூக்கள் நிறைந்திருப்பது வரிகளுக்குப் பொருந்தி போகிறது. இதற்கு ரசிகர்கள் பலவிதமான கமென்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தை எடுத்த Kresha Bajaj க்கு, 'நீங்கள் கிளிக் செய்யும் போது ஷ்ரத்தா இன்னும் அழகாக இருக்கிறார்' என வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் ஒரு ரசிகர். இருவரும் டேட் செய்வதை உறுதிப்படுத்தவில்லை. இந்த வதந்தி நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதை பற்றி முன்பொரு முறை கேட்கப்பட்ட கேள்விக்கு ஷ்ரத்தாவின் தந்தையும் நடிகருமான சக்தி கபூர், "ரோஹன் எங்களுடைய குடும்ப நண்பர். அவர் தந்தையை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். ரோஹன் எங்களை அடிக்கடி சந்திப்பார். ஆனால் ஷ்ரத்தாவைத் திருமணம் செய்துக்கொள்ள இதுவரை கேட்டதில்லை. ஷ்ரத்தா அவளது துணையைத் தேர்ந்தெடுத்து சொன்னால் நான் ஏன் மறுக்க போகிறேன்" என ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism