Published:Updated:

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா: அடுத்து இணையும் பாலிவுட் ஜோடி? திருமண ஏற்பாடுகள் தீவிரம்!

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆடை வடிவமைப்பாளர் மனிஷ், இல்லத்திற்கு கியாரா அத்வானி நேற்று சென்றிருக்கிறார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா: அடுத்து இணையும் பாலிவுட் ஜோடி? திருமண ஏற்பாடுகள் தீவிரம்!

திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆடை வடிவமைப்பாளர் மனிஷ், இல்லத்திற்கு கியாரா அத்வானி நேற்று சென்றிருக்கிறார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி
எம்.எஸ்.தோனியின் பயோகிராபி படத்தில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்', `ஷெர்ஷா' போன்ற படங்கள் மூலமாகத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர். இதில் `ஷெர்ஷா' படத்தில் கியாராவுடன் சேர்ந்து நடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா.

அப்போதிருந்தே சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால் அவர்கள் இருவர் தரப்பிலிருந்தும் இந்தச் செய்திகளை மறுத்தோ அல்லது உறுதி செய்தோ எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி
சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

இதனிடையே சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி  நடைபெறவுள்ளதாகவும், திருமணத்தை ராஜஸ்தானில் உள்ள ஜெய்சாலிமர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், தகவல்கள்  வெளியானது. இந்நிலையில் திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆடை வடிவமைப்பாளர் மனிஷ், இல்லத்திற்கு கியாரா அத்வானி நேற்று சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி
சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் தற்போது டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றிருக்கிறார். திருமணம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலையும் இந்த ஜோடி அறிவிக்கவில்லை என்றாலும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டுதான் வருகின்றனர் என்கிறார்கள். ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் - ஆலியா பட், கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் போன்ற பாலிவுட் ஜோடிகள் பட்டியலில் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஜோடியும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.