Published:Updated:

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் படமும் குரங்கு மனிதனை நினைவூட்டுகிறது. ஆனால் இதன் தன்மை வேறு.

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் படமும் குரங்கு மனிதனை நினைவூட்டுகிறது. ஆனால் இதன் தன்மை வேறு.

Published:Updated:
இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!’ - இந்த வரிகள் எப்போதும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்குப் பொருந்தும்.

சமீபத்தில் அவர் ‘ட்வீட் ரிலீஸ்’ செய்த படம்தான் ‘ஈப் ஆலே ஊ...!’

‘We are One’ என்ற உலகத் திரைப்பட விழாவை (மே 29 - ஜூன் 7) யூடியூபைக் களமாகக் கொண்டு கொரோனா காலத்தில் ஆன்லைனில் செயல்படுத்தியிருக்கிறார்கள் சினிமா ஆளுமைகள். யூடியூபில் சில மணிநேரம் என்னும் கண்டிசனுடன் வெளியான இப்படங்களை சில தினங்களில் பணம் கட்டிப் பார்க்கமுடியும் என்பது கூடுதல் சிறப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புனே திரைப்படக் கல்லூரியில் சினிமா பயின்ற பிரதீக் வட்ஸ் என்ற இளைஞர் தன் கல்லூரி நண்பர்களை வைத்தே படத்தை உருவாக்கி யிருக்கிறார். முதன்மைப் பாத்திரத்தில் நடித்த சர்துல் பரத்வாஜ் புனே திரைப்படக் கல்லூரியின் பெருமைமிகு மாணவன். நடிப்பதுபோல் அல்லாமல் இயல்பாக ஒவ்வொரு பாத்திரமும் தேவை உணர்ந்து அளவாக நடித்திருப்பதும், ஆவணப்பட பாணி யில் பின்னணி இசை ஏதுமில்லாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டிருப்பதும் யதார்த்தத்துக்கு வலுசேர்க்கின்றன.

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

கதை என்ன? டெல்லியில் தன் கர்ப்பிணி சகோதரியோடு ஒண்டுக் குடித்தன வீடொன்றில் எக்ஸ்ட்ரா லக்கேஜாக வசித்து வருகிறான் அஞ்சனி என்ற இளைஞன். அக்காவின் கணவர் ஒரு செக்யூரிட்டியாக கேளிக்கைப் பூங்காவில் வேலை செய்கிறார். அவரின் உதவியால் ‘அரசாங்க’ வேலையொன்று அஞ்சனிக்குக் கிடைக்கிறது. பெரிய பெரிய சிவப்புக் கற்கள் சுமந்த மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களில், ‘லைசன்ஸ்’ ஏதுமில்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் குரங்குகளை விரட்டுவதுதான் அந்த வேலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனக்குக் கிடைத்த அந்த வேலை அவனுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை அல்லது அதை செய்யத் தெரியவில்லை. அதனால் ஏற்படும் குழப்பங்களும் போராட்டங்களும்தான் கதை. டெல்லியின் சிறப்பே கான்க்ரீட் காடுகளுக்குள் தொலையாத மரங்களும் அதில் வசிக்கும் குரங்குகளும் தான். டெல்லி மக்களின் பார்வையில் தினமும் சாதாரணமாய்க் கடந்து செல்லும் குரங்குகளை விரட்ட சிலர் வேலை செய்கிறார்கள் என்பதே பார்வையாளர்களுக்கு ஆச்சர்யம் தரும்.

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

2001-ல் ‘காலா பந்தர்’ எனும் குரங்கு மனிதன் ஒருவன் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்தான். அவனால் பலர் இறக்கவும், அதனால் இப்போதும் இரவு நேரங்களில் பலர் வீட்டைவிட்டு வெளியே வர பயப்படுகிறார்கள், அது மனிதன் அல்ல ‘லங்குர்’ வகைக் குரங்குதான் என்பவர்களும் உண்டு. ‘இந்தியாவின் மாஸ் ஹிஸ்டீரியா இது!’ என இப்போதும் வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படமும் குரங்கு மனிதனை நினைவூட்டுகிறது. ஆனால் இதன் தன்மை வேறு.

ராஷ்டிரபதி பவன், சுப்ரீம் கோர்ட் போன்ற பிரமாண்ட கட்டடங்களைச் சுற்றி 24*7 எந்திரத்துப்பாக்கியோடு காவல் காப்பவர்கள்கூட இந்தக் குரங்குகளைக் கண்டு கொள்வதில்லை. நூற்றுக்கணக் கானோர் குரங்கு விரட்டிகளாக டெல்லியில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அஞ்சனிக்கு அவன் நண்பன் மஹிந்தர் கற்றுக்கொடுத்த குரங்கு விரட்டும் டெக்னிக் தான் படத்தின் டைட்டிலைப் போன்ற ஓசை எழுப்புதல். அது அத்தனை எளிதில்லை என்பது படம் பார்த்தால் புரியும். குரங்குகளின் வகைகள், அவை மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் இடம், டெல்லியில் நாம் அதிகம் பார்த்திராத சேரிப்பகுதி என இப்படம் டெல்லி குறித்து நம் மனம் வரைந்து வைத்திருக்கும் சித்திரங்களை அழித்து மாற்றி வரைகிறது.

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

குரங்கு மனிதன் தாக்குதல் சம்பவத்தை வைத்து 2006-ல் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘டெல்லி 6’ என்ற படத்தில் குரங்கு மனிதனை ஒரு குறியீடாகக் காட்டியிருப்பார்கள்.

பிழைப்பைத் தக்கவைக்க ‘ஈப் ஆலே ஊ...!’வில் அஞ்சனியும் குரங்கு மனிதனாக வாழ்கிறான். அவனோடு செல்ஃபி எடுக்குமளவுக்கு மக்கள் அந்த ஒரிஜினல் குரங்கு மனிதனை மறந்தே விட்டார்கள் என்பதை இந்தக் காட்சிகள் மூலம் உணர முடியும்.

இப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா?

அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையைத்தான் அஞ்சனி பிரதிபலிக்கிறான். படத்தின் சிறப்பே எந்தவித மிகை உணர்ச்சியும் சேர்க்கப்படாமல், துயர்மிகு காட்சிகளைச் செருகாமல், நாமே குரங்கு விரட்டியாக வேலைக்குச் சேர்ந்தால் நமக்கு என்னென்ன நேருமோ அதெல்லாம் அஞ்சனிக்கு நேர்கிறது. அஞ்சனியின் மாமா தன் செக்யூரிட்டி துப்பாக்கியைக்காட்டி, கெடுபிடி பண்ணும் வியாபாரியை வெளியே விரட்டும் காட்சி பெருநகரங்களில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் வலியேதான்!

‘ஈப் ஆலே ஊ...!’ முடிவில் அஞ்சனியின் உக்கிரமான குரங்கு ஆட்டம் பல கதைகளை உரக்கப் பேசிச் செல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism