Published:Updated:

"சல்மானுடன் காதலில் இருந்த அந்த 8 வருடங்களும் நரகமானவை"- சல்மான் கான் குறித்துப் பேசிய சோமி அலி

சோமி அலி,சல்மான் கான்

நடிகை சோமி அலி சல்மான் கானுடன் காதலில் இருந்த அந்த 8 வருடங்களும் வாழ்க்கை தனக்கு நரகமாக இருந்ததது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

"சல்மானுடன் காதலில் இருந்த அந்த 8 வருடங்களும் நரகமானவை"- சல்மான் கான் குறித்துப் பேசிய சோமி அலி

நடிகை சோமி அலி சல்மான் கானுடன் காதலில் இருந்த அந்த 8 வருடங்களும் வாழ்க்கை தனக்கு நரகமாக இருந்ததது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
சோமி அலி,சல்மான் கான்

கிருஷ்ணன் அவதார், அண்டோலன் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி. சோமி அலியும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் 1991 முதல் 1999 ம் ஆண்டு வரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் சல்மான் கானுடன் இருந்த அந்த எட்டு வருடமும் தனக்கு நரகமான காலமாக இருந்ததது என்று குற்றம்சாட்டி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், " சல்மான் கான் உடனான எட்டு ஆண்டு கால வாழ்க்கை மிகவும் மோசமானவை. ஒரு நாளும் அவர் என்னை மதித்ததில்லை. என்னை குறைத்து மதிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொது இடங்களில் என்னை அவரின் காதலி என அடையாளம் காட்டியதில்லை. நண்பர்களின் மத்தியில் என்னை அவமானப்படுத்துவார். அவர் என்னை நடத்தியதை பொது வெளியில் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

என்னை நன்கு கவனித்து நேசிக்கும் ஒருவரைத் தேடுவது தான் என்னுடைய ஆசை. இந்த ஆண்கள் என்னை பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் உணரவில்லை. நான் ஒரு ஆண். ஆண்களால் மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும் எனக் கூறி, என் மீது வன்முறையைச் செலுத்தும் தைரியம் அவருக்கு இருந்தது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் அதிகமான துன்பங்களை அனுபவித்தேன்" என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.