Published:Updated:

Salman Khan: `உங்கள் உண்மை முகம் வெளிப்படும்' -எச்சரிக்கும் முன்னாள் காதலி சோமி அலி!

Salman Khan முன்னாள் காதலி சோமி அலி

"உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள்" - சோமி அலி

Salman Khan: `உங்கள் உண்மை முகம் வெளிப்படும்' -எச்சரிக்கும் முன்னாள் காதலி சோமி அலி!

"உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள்" - சோமி அலி

Published:Updated:
Salman Khan முன்னாள் காதலி சோமி அலி

சல்மான் கானுடன் 8 வருடத்திற்கு மேலாக காதலில் இருந்தவர் பாலிவுட் நடிகை சோமி அலி. 1990-களில் சில படங்கள் நடித்திருந்த சோமி அலி, சல்மான் கானுடனான உறவு முறிவுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அமெரிக்காவில் ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டைன் பாலியல் ரீதியாக பல பெண்களைத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். அவரோடு சல்மான் கானை மறைமுகமாக ஒப்பிட்டுத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பு ஒன்றை சோமி அலி பகிர்ந்திருந்தார்.

அதில், "பாலிவுட்டின் ஹார்வி வெயின்ஸ்டைன்! உங்கள் முகத்திரை வெளிப்படும். உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள். ஐஸ்வர்யாராய் பச்சன் போல" என்று பகிர்ந்து இருந்தார். அந்தப் பதிவில் ஐஸ்வர்யா ராயையும் டேக் செய்திருக்கிறார் சோமி. சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் முன்னர் காதலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோமி அலியின் பதிவு
சோமி அலியின் பதிவு

சோமி அலி, சல்மான் கான் நடித்த 'Maine Pyaar Kiya' படத்தால் ஈர்க்கப்பட்டு சல்மானைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்துக்கொள்ளவும் விருப்பப்பட்டதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சல்மானின் புகைப்படத்தைத் தன்னுடைய பர்ஸில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர்களுடைய பிரிவுக்குக் காரணமாகக் குறிப்பிட்டது, "அவருடன் பிரேக் அப் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அதனால்தான் எங்களின் உறவு முறிந்தது. அவ்வளவே. பாலிவுட்டில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு, நான் ஒருபோதும் இந்தியாவுக்கு வந்ததில்லை, பிரேக் அப்புக்கு பிறகு எதுவும் எனக்கு அங்கில்லை." சோமி அலி தற்போது அமெரிக்காவில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்தும் சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார்.

இந்தப் பதிவு வைரலாகத் தொடங்கியதும் சமீபத்தில் அதனை தன்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் சோமி அலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism