Published:Updated:

"என் மீது எந்த வாரன்ட்டும் இல்லை..." - சோனாக்ஷி சின்ஹா விளக்கம்!

சோனாக்ஷி சின்ஹா

என் மீது வாரன்ட் வந்துள்ளதாக பரவிய வதந்தி, ஊடகங்களில் வலம் வந்தது. அது முழுக்கவே ஜோடிக்கப்பட்டது - சோனாக்ஷி சின்ஹா விளக்கம்!

"என் மீது எந்த வாரன்ட்டும் இல்லை..." - சோனாக்ஷி சின்ஹா விளக்கம்!

என் மீது வாரன்ட் வந்துள்ளதாக பரவிய வதந்தி, ஊடகங்களில் வலம் வந்தது. அது முழுக்கவே ஜோடிக்கப்பட்டது - சோனாக்ஷி சின்ஹா விளக்கம்!

Published:Updated:
சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு வாரன்ட் விதிக்கப்பட்டிருக்கிறது எனப் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்து சோனாக்ஷி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பொய்யான செய்தி எனவும் புகாரளித்தவர் தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பப்ளிசிட்டி பெற முயற்சி செய்கிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார் சோனாக்ஷி."எந்தவித அதிகாரிகளிடமும் உறுதிப்படுத்தாமல் என் மீது வாரன்ட் வந்துள்ளதாக பரவிய வதந்தி, ஊடகங்களில் வலம் வந்தது. அது முழுக்கவே ஜோடிக்கப்பட்டது. நேர்மையற்ற ஒருவரின் வேலை அது. எல்லா மீடியா நிறுவனங்களுக்கும் நான் கோரிக்கை வைக்கிறேன், தனிப்பட்ட ஒருவரின் பப்ளிசிட்டிக்காக பரப்பப்படும் பொய்யான செய்திகளை வெளியிடாதீர்கள்."

சோனாக்ஷி சின்ஹா ஸ்டோரி
சோனாக்ஷி சின்ஹா ஸ்டோரி
சோனாக்ஷி சின்ஹா ஸ்டோரி
சோனாக்ஷி சின்ஹா ஸ்டோரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இந்த மனிதர் பப்ளிசிட்டி பெறவே இதையெல்லாம் செய்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் நான் இத்தனை வருடங்களாக உருவாக்கிய என் புகழ் மீது களங்கம் விளைவிக்கவும் அதை காட்டி என்னிடம் பணம் பெறவுமே இதையெல்லாம் செய்துவருகிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும்படி செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையானவற்றை என்னுடைய சட்ட வல்லுநர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். நான் வீட்டில் இருக்கிறேன். எனக்கு எதிராக எந்தவித வாரன்ட்டும் இல்லையென நான் உறுதியாக சொல்ல முடியும்" என்று பதிவிட்டுளளார். அவரது ஸ்டோரியில் வீட்டில் அமர்ந்து டீ குடிக்கும் படத்தைப் பகிர்ந்து 'ஹவுஸ் அரெஸ்ட்' என ஸ்மைலி எமோஜியோடு பகிர்ந்துள்ளார்.