Published:Updated:

"அது மார்பிங்குன்னு தெரியலையா?"- `சல்மான் கானுடன் திருமணம்' சர்ச்சை குறித்து சோனாக்ஷி சின்ஹா!

சர்ச்சைப்படம்

நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடந்ததாக பொய்யான புகைபடத்துடன் வந்த செய்திக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா விளக்கமளித்துள்ளார்.

"அது மார்பிங்குன்னு தெரியலையா?"- `சல்மான் கானுடன் திருமணம்' சர்ச்சை குறித்து சோனாக்ஷி சின்ஹா!

நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடந்ததாக பொய்யான புகைபடத்துடன் வந்த செய்திக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:
சர்ச்சைப்படம்

நடிகர் சல்மான் கான் பாலிவுட்டில் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் பல நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டாலும் யாருடனான நட்பையும் உறுதி செய்தது இல்லை. நடிகை ஐஸ்வர்யா ராயுடனான காதல் மட்டுமே வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது.

சமீபத்தில் நடிகர் சல்மான் கான் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவைத் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு செய்தி வெளியானது. அதனை நிரூபிக்கும் விதமாக புகைப்படங்களும் வெளியாகின. சல்மான் கான் சோனாக்ஷியுடன் மோதிரம் மாற்றிக்கொண்டது போன்ற படம் சர்ச்சையைக் கிளப்பியது. சோனாக்ஷி சின்ஹாவும் நெற்றியில் குங்குமம் இட்டு சேலை கட்டியபடி காட்சியளித்தார்.

சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா

மிகவும் பரபரப்பு செய்தியாக சமூக வலைதளத்தில் வெளியான இது குறித்து சல்மான் கான் தரப்பில் எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "உண்மையான படத்திற்கும், மார்பிங் செய்யப்பட்ட படத்திற்கும் வித்தியாசம் சொல்ல முடியாத ஊமையா நீங்கள்?" என்று கேட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் 'ஆஸ்க் மி செஷன்' ஒன்றில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சோனாக்ஷி சின்ஹா பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், "அனைவரும் திருமணம் செய்கின்றனர். நீங்கள் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சோனாக்ஷி, "அனைவருக்கும் கொரோனா வருகிறது. எனக்கும் கொரோனா வரவேண்டுமா?" என்று கேட்டு வாயை மூட வைத்தார்.

'டபுள் எக்ஸ்எல்' என்ற படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா கடந்த சில மாதங்களாக சஹீர் இக்பால் என்பவரை காதலித்து வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.