ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி. ஷஷி தரூர் மனைவி மரணம் தொடங்கி இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வரை தொடர்ந்து பல விவகாரங்களில் எல்லை மீறிக்கொண்டே இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து ரிபப்ளிக் டிவி மீது வைக்கப்பட்டுவருகிறது.
எந்த விவகாரத்துக்கும் அர்னாபால் உடனடியாக கவனம் ஈர்க்க முடியும். அதுதான் அவரது பலமும் கூட. ஆனால் அவற்றை உண்மையில் முக்கியமான விவகாரங்களுக்கு அவர் பயன்படுத்துவதில்லை என்பதே அவர் மீது இருக்கும் பெரும் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுஷாந்த் சிங் வழக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஒருபுறம் விசாரணை நடத்திக்கொண்டிருக்க ரிபப்ளிக் டிவி ப்ரைம் டைம்மில் தினமும் தீர்ப்பு வழங்கிக்கொண்டிருந்தது. உச்ச நட்சத்திரங்கள் பலர் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி ட்ரெண்ட் ஆவதுதான் அர்னாப் ஸ்டைல். ரிபப்ளிக் டிவியின் இந்தப் போக்கும் அதன் விளைவாக அது பெற்ற வரவேற்பும் இவற்றைச் செய்யத் தயங்கிக்கொண்டிருந்த டைம்ஸ் நவ் போன்ற மற்ற சேனல்களையும் இதே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது என்பதுதான் சோகம்.
Also Read
இதன் விளைவாக நேற்று முப்பதுக்கும் மேற்பட்ட பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள். தங்களை மிகவும் தரக்குறைவாகப் பேசுவதாகவும் அவதூறு பரப்புவதாகவும் ரிபப்ளிக் டிவி மீதும் டைம்ஸ் நவ் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கின்றன. ஷாருக்கான், ஆமீர் கான், கரண் ஜோகர், சல்மான் கான் போன்ற முக்கிய பாலிவுட் புள்ளிகள் பலரது தயாரிப்பு நிறுவனங்களும் இதில் அடங்கும்.

"பாலிவுட் குறித்துப் பொறுப்பற்ற கருத்துகளையும் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும் பரப்பக்கூடாதென ரிபப்ளிக் டிவி மற்றும் அந்த சேனலை சேர்ந்த அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிரதீப் பந்தாரியையும் டைம்ஸ் நவ் மற்றும் அந்த சேனலை சேர்ந்த நவிகா குமார் மற்றும் ராகுல் சிவசங்கரையும் மதிப்பிற்குரிய நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். இதுவரை அப்படிச் செய்து அவர்கள் வெளியிட்ட செய்திகளை நீக்கவும் வலியுறுத்த வேண்டும்." என்று இந்த வழக்கின் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளன இந்தத் தயாரிப்பு நிறுவனங்கள்.
'Dirt', 'flith', 'scum', 'druggies' போன்ற மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பாலிவுட்டை இந்த சேனல்கள் வசைபாடுவதாகவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சுஷாந்த் வழக்கு CBI-க்கு கை மாற்றப்பட்டு விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் போது இந்த சேனல்கள் தனியாக அவர்கள் போக்கில் ஒரு புலன் விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கி வருகின்றன. இது நீதித்துறையைக் கேலிக்கு உள்ளாக்கும் செயல் என்றும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்திருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்:
The Producers Guild of India
The Cine & TV Artiste Association
The Film and TV Producers Council
Screenwriters Association
Aamir Khan Productions
Ad-Labs Films
Ajay Devgn Fflims
Andolan Films
Anil Kapoor Film and Communication Network
Arbaaz Khan Productions
Ashutosh Gowarikaer Productions
BSK Network and Entertainment
Cape of Good Films
Clean Slate Filmz
Dharma Productions
Emmay Entertainment & Motion Pictures
Excel Entertainment
Filmkraft Productions
Hope Production
Kabir Khan Films
Luv Films
Macguffin Pictures
Nadiadwala Grandson Entertainment
One India Stories
R.S. Entertainment
Rakeysh Omprakash Mehra Pictures
Red Chillies Entertainment
Reliance Big Entertainment
Reel Life Productions
Rohit Shetty Pictures
Roy Kapur Productions
Salman Khan Ventures
Sohail Khan Productions
Sikhya Entertianment
Tiger Baby Digital
Vinod Chopra Films
Vishal Bhardwaj Film
YashRaj Films