Published:Updated:

Ram Setu: `ராமர் பாலம் உண்மையா கட்டுக்கதையா'- படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்ட சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி

இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பதைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்வதுதான் 'Ram Setu' எனும் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

Published:Updated:

Ram Setu: `ராமர் பாலம் உண்மையா கட்டுக்கதையா'- படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்ட சுப்பிரமணியன் சுவாமி!

இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பதைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்வதுதான் 'Ram Setu' எனும் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி

இந்து புராணமான ராமாயணத்தில் இந்துக் கடவுளான ராமர், ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே கற்களால் பாலம் கட்டினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழில் 'ராமர் பாலம்' என்றும் பிற மொழிகளில் 'ராம சேது(Ram Setu)' அல்லது 'Adam's Bridge' என்றும் அழைக்கப்படுகிறது. இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பதைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்வதுதான் 'Ram Setu' எனும் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நுஷ்ரத் பருச்சா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் 'ராம சேது' பற்றித் தவறாகச் சித்திரிக்க வாய்ப்புகள் இருப்பதால் படத்தின் ஸ்கிரிப்ட்டை சரிபார்க்க வேண்டும் என்று நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் 8 பேருக்கு வழக்கறிஞர் சத்ய சபர்வால் மூலம் சட்டபூர்வ நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.

அதில், "இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ராம சேதுவை (Ram Setu) சீர்குலைக்கும் வகையில் இருந்த சேதுசமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து 2007-ல் வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இதையடுத்து மக்களின் நம்பிக்கையையும் வழிபாட்டையும் பாதுகாப்பது அரசியலமைப்பின் கட்டாயம் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம், ராம சேதுவை இடிக்கும் அல்லது சேதப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் இடைக்காலத் தடைவிதிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 'Ram Setu' என்ற திரைப்படம் படமாக்கப்பட்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் கதை ராம சேது பற்றி உள்ளதாலும், ராமசேது குறித்த நீதிமன்ற வழக்கு தொடர்பான காட்சிகள் இதில் படமாக்கப்பட்டிருப்பதாலும் இதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய மற்றும் உண்மைகளைத் தவறாகச் சித்திரிக்கப்படுவதைத் தடுக்க இப்படத்தின் ஸ்கிரிப்ட்டையும் காட்சிகளையும் சுப்பிரமணியன் சுவாமியுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.