Published:Updated:

#DilBechara எப்படி? ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்!

Dil Bechara
News
Dil Bechara

கேன்சரால் பாதிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இருவர் காதலில் இணைந்தால் அதுதான் 'தில் பெச்சாரா'. #DilBechara

சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது அவர் நடித்த கடைசித் திரைப்படம் #DilBechara. ஏ.ஆர்.ரஹ்மான் இசை மட்டுமல்ல இந்தப் படத்தின் கதையிலேயே தமிழ் கனெக்ட்டும் இருக்கிறது. அது என்ன எனப் பார்க்கும் முன்...

நேற்று இரவு 7.30-க்கு படத்தை 'Dil Bechara' படத்தை சப்ஸ்கிரைபர்ஸ் மட்டுமன்றி அனைவருக்கும் இலவசமாக வெளியிடப்போவதாக அறிவித்திருந்த ஹாட்ஸ்டார் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே படத்தை வெளியிட்டுவிட்டது. இந்தியா முழுவதும் இருக்கிற எதிர்பார்ப்புக்கு அனைவரும் மொத்தமாக 7:30-க்கு ஹாட் ஸ்டாரில் நுழைந்திருந்தால் அந்த ஆப்பே க்ராஷ் ஆகியிருக்கும். ரேட்டிங்கிலும் இதுவரை இல்லாத அளவுக்கு 9.8 முதல் 10 வரை தொடர்ந்து ரேட்டிங்கை வாரி வழங்கி வருகின்றனர் சுஷாந்த் ரசிகர்கள். அப்படி எல்லோரும் கொண்டாடப்படும் அளவுக்குப் படத்தில் என்ன இருக்கிறது?

Dil Bechara
Dil Bechara

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இளவரசியும், இளவரசனும்!

''ஒரு ஊர்ல ஒரு இளவரசனும் இளவரசியும் இருந்தாங்க... அவங்க ரெண்டு பேரும் பாலிவுட் படங்கள்ல வர்ற மாதிரி உயிருக்கு உயிரா லவ் பண்ணாங்க... அப்டின்னு எங்க பாட்டி சொன்ன ராஜா காலத்து கதைகளை அடிக்கடி விரும்பி கேட்டுருக்கேன்... அந்த கதைகள்ல கடைசில இளவரசியும் இளவரசனும் சேருற மாதிரி ஹேப்பி எண்டிங்கோட முடியும்... ஆனா, நிஜ வாழ்க்கைக்கும் இந்த ஹேப்பி எண்டிங்குக்கும் ரொம்ப தூரம்...எங்க பாட்டி சொன்ன மாதிரி அந்த பிரின்சஸ் கதைலதான் இதெல்லாம் சாத்தியம்!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டைட்டில் கார்டில் ஹீரோயின் சஞ்சனா சங்கியின் வாய்ஸ் ஓவரில் சொல்லப்படும் இந்த குட்டி கதைதான் 'தில்பெச்சாரா' படத்தின் முழுக்கதை.

கேன்சரால் பாதிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இருவர் காதலில் இணைந்தால் அதுதான் 'தில் பெச்சாரா'. மையக்கதையே ஹீரோயின் சஞ்சனா சங்கியை வைத்துதான் நகர்வதால் பல இடங்களில் கிஷி பாசு கேரக்டரில் அவரும் மனதை கலங்கடிக்கிறார்.

Dil Bechara
Dil Bechara

"எனக்கு கேன்சர். ஆனா, என்னால ஸ்ட்ராங்கால்லாம் இருக்க முடியாது. எல்லோரையும் மாதிரி நானும் நார்மலா இருக்கணும். மத்தவங்க மாதிரியே நானும் சிரிக்கணும், பெரிய காரணம் எதுவும் இல்லைன்னாலும் அழணும். என் காலேஜ்லயே க்யூட்டான சீனியர் பையனோட சுத்தணும்... ஆனா, என் கனவுல வர்ற பாய் ஃப்ரண்ட்கூட கிட்டார் இல்லாம ஆக்சிஜன் சிலிண்டரோடதான் வர்றான்!"

கேன்சர் நோயாளிகளின் இயல்பான வாழ்க்கைக்கான ஏக்கத்தையும் வலியையும் எவ்வித ஓவர் எமோஷனலும் இன்றி வாய்ஸ் ஓவரிலேயே கடத்திவிட்டுச் செல்லும் இடத்திலேயே சஞ்சனா சங்கி கவர்ந்து விடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கை போச்சே', 'கேதார்நாத்', 'எம்.எஸ்.தோனி', 'சிச்சோரே' என சுஷாந்த்தின் முந்தைய படங்கள் பலவும் வெற்றி-தோல்வி-ஏமாற்றம்-இறப்பு என வாழ்க்கையின் மீதான மனிதனின் போராட்டத்தை பற்றிப் பேசியவைதான். சுஷாந்த்தின் படங்களில் எல்லாம் இறப்பு குறித்தும், தோல்வி குறித்தும் தத்துவார்த்தமாக எதாவது பேசப்பட்டிருக்கும். இயற்கையாகவே சுஷாந்துக்கு அப்படிப்பட்ட படங்கள் அமைந்திருந்தது பேராச்சர்யம்தான். இப்போது 'தில் பெச்சாரா'விலும் மரண வலியோடு புன்னகைக்கும் மேனி என்ற கேன்சர் நோயாளியாக வாழ்ந்திருக்கிறார் சுஷாந்த்.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடைப்பட்ட இறுதி நாட்களில் நின்று உரையாடிவிட்டு சென்றிருக்கிறார் சுஷாந்த். ஹீரோயினின் அப்பாவுடன் மழையில் பியர் குடித்துக்கொண்டே பேசும் ஒரு காட்சி போதும் சுஷாந்தின் தேர்ந்த நடிப்பை பாராட்ட! கேன்சர் நோயாளிகளுக்கு நோய் ஏற்படுத்தும் வலியைவிட பிறர் காட்டும் பரிதாபமும், பொதுவில் கலந்து கொள்ளவிடாமல் தங்களுக்கென கொடுக்கப்படும் பிரத்யேக சலுகைகளுமே பெரும் மன அழுத்ததை ஏற்படுத்திவிடும். இந்த உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சுஷாந்த்.

சுஷாந்த்
சுஷாந்த்

''எனக்கு பேஸ்கெட் பால் விளையாட ரொம்ப பிடிக்கும். கேன்சர்னால காலை எடுத்ததுக்கு அப்புறம் பேஸ்கெட் பால் விளையாட முடியாதோன்னு நினைச்சேன். செயற்கை காலோட என்னால விளையாட முடிஞ்சது. ஆனா, முன்ன மாதிரி என்னோட ஜம்பிங்கை என்னால ஃபீல் பண்ண முடியல... முன்ன இருந்த ஒரு மேஜிக் இதுல இல்ல. ஓடுனா எனக்கு ஓடுற மாதிரியே ஃபீல் ஆகல. நான் தோத்துப்போனா எல்லாரும் பரவால்லைனு சொல்றாங்க. என்னோட வெற்றியை என்னால முழுசா அனுபவிக்க முடியல. எதோ ஒரு இன்கம்ப்ளீட் ஃபீல்'' என விரக்தியில் சுஷாந்த் பேசும் வசனங்கள் எங்கும் பெரிதாக பேசப்படாதவை.

நோய் பாதிப்பால் சரிந்துவிழும் இடம் ஆகட்டும், தன்னுடைய இறுதி அஞ்சலியை தானே பார்க்க விரும்பும் இடமாகட்டும். இந்த காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி... 'We Miss You!' சுஷாந்த். அதிலும் அந்த ஓப்பனிங் பாடலில் ஒரே டேக்கில் ஆடிப்பாடியதெல்லாம் மெர்சல்! இன்னும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கலாமே சுஷாந்த்?!

ஹீரோயின் அம்மா-அப்பா கேரக்டரில் வருபவர்கள், சுஷாந்த்தின் நண்பராக கண்ணில் கேன்சர் பாதிப்பு கொண்ட நபர் என துணைக் கதாபாத்திராங்களில் வரும் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஹீரோயினின் அப்பா 'இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்ஜினீயரீங்கைத் தவிர எல்லாமே தெரியும்' என மகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் இடத்தில் எல்லாம் அதை நடிப்பு என்று சொல்லிவிடவே முடியாது.

சுஷாந்த், சஞ்சனா சங்கி
சுஷாந்த், சஞ்சனா சங்கி

சயிஃப் அலிகானுக்கு ஒரு சின்ன கேமியோதான் என்றாலும் வாழ்க்கை குறித்தும், தற்கொலை குறித்தும் அவர் பேசும் வசனங்கள் சுஷாந்தோடு நேரடியாக கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. சயிஃப் அலிகானை காட்டிலும் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் முக்கிய இடம்பெற்றுவிடுகிறார். இன்ட்ரோவிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா சீனிலுமே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகனாக வெளிப்படுத்திக்கொள்கிறார் சுஷாந்த். சூப்பர் ஸ்டாரின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், அவரை போன்றே நடித்து ஷார்ட் ஃபிலிம் எடுக்கும் காட்சிகள் என படம் முழுவதும் சூப்பர் ஸ்டார் நிரம்பியிருக்கிறார். இதோடு 'சரி' என்ற வார்த்தையும் முக்கியமான எமோஷனல் காட்சிகளில், முக்கிய வசனமாக வருவது சுஷாந்தின் தமிழ் ரசிகர்களை இன்னும் ஃபீலாக்கும்.

கேன்சர் ஏற்படுத்தும் வலி வேதனையோடு காதலையும் குழைத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்துள்ள பாடல்களும் பிண்ணனி இசையும் படத்தை செம 'க்ளாஸ்' அந்தஸ்த்துக்கு உயர்த்துகிறது. அதுவும் சுஷாந்த்தின் கடைசி நிமிடங்களுக்கு ஏ.ஆர்.ஆரின் பிஜிஎம் மொத்தமாகவே மனதை உருக்கிவிடும்.

வழவழவென இழுப்பதற்கும், இன்னும் காட்சிகளை சேர்ப்பதற்கும் பல வாய்ப்புகள் இருந்தும் சொல்ல வந்ததை செம நச்சென சொல்லி, தேவையான காட்சிகளை மட்டும் வைத்து 100 நிமிடங்களுக்குள் படத்தை முடித்ததற்காக இயக்குநர் முகேஷ் சாப்ராவுக்குப் பெரிய பாராட்டு.

எழுத்தாளர் ஜான் க்ரீனின் நாவலை மையமாக வைத்து உருவான 'The Fault In Your Stars' படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், நமக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து நம்மை எமோஷனலாக கனெக்ட் செய்ய வைத்திருக்கிறார்கள்.
#DilBechara
#DilBechara

ஒட்டுமொத்த இந்தியாவும் எவ்வித வேறுபாடுமின்றி முழுமையான அன்பால் மட்டுமே இன்று 'தில் பெச்சாரா'வை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் இந்தப் படத்தில் சயிஃப் அலிகான் பேசும் ஒரு வசனத்தைத்தான் சுஷாந்த்தை நோக்கி சொல்லத் தோன்றுகிறது.

'It is illegal to die by Suicide...' நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் சுஷாந்த். நீங்கள் ஆசைப்பட்டதைப் போன்றே இன்னொரு ரஜினியாக, இன்னொரு சூப்பர் ஸ்டாராக... வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்!