Published:Updated:

நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த வீடு; 2.5 ஆண்டுகளாக யாரும் வாடகைக்கு வரவில்லை - உரிமையாளர்

சுஷாந்த் சிங்

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வீட்டிற்கு யாரும் வாடகைக்கு வர மறுத்து வருகின்றனர்.

நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த வீடு; 2.5 ஆண்டுகளாக யாரும் வாடகைக்கு வரவில்லை - உரிமையாளர்

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வீட்டிற்கு யாரும் வாடகைக்கு வர மறுத்து வருகின்றனர்.

Published:Updated:
சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது தற்கொலை கொடர்ந்து மர்மமாகவே இருந்தது. இத்தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. சுஷாந்த் சிங்கிற்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தி போதைப்பொருளை அதிக அளவு வாங்கிக்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது. சுஷாந்த் சிங் தான் தற்கொலை செய்த வீட்டிற்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் குடியேறினார். அந்த வீட்டிற்கு மாதம் ரூ.4.51 லட்சம் வாடகை கொடுத்து வந்தார். அவர் தற்கொலை செய்ததில் இருந்து தற்போது வரை அந்த வீடு காலியாகத்தான் இருக்கிறது.

ரியா சக்ரவர்த்தி
ரியா சக்ரவர்த்தி

4 படுக்கை கொண்ட 3600 சதுர அடி வீடு கடற்கரையை நோக்கி இருக்கிறது. சுஷாந்த் சிங் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீட்டிற்கு யாரும் வாடகைக்கு வர மறுத்து வருகின்றனர். இனிமேல் சினிமா துறையில் தொடர்புடையவர்களை வாடைக்கு வைப்பதில்லை என்றும், கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விட வீட்டு உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இந்த வீடு வாடகைக்கு இருப்பதாக தரகர் ரஃபீக் மெர்ச்சண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மாதம் 5 லட்சம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ``வீடு வாடகைக்கு பார்க்க வருபவர்களிடம் இதற்கு முன்பு இந்த வீட்டில் சுஷாந்த் சிங் வாடகைக்கு இருந்ததாக முன்கூட்டியே சொல்லி விடுகிறோம். இந்த வீட்டிற்கு வர அனைவரும் பயப்படுகின்றனர். வீட்டை பார்க்க கூட வரபயப்படுகின்றனர். வீட்டை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது .வீட்டு உரிமையாளரும் வீட்டு வாடகையை குறைக்க மறுக்கிறார்.

வாடகையை குறைத்தால் உடனே வாடகைக்கு சென்றுவிடும். மக்கள் சர்ச்சை இல்லாத வீடுகளை வாங்கவே விரும்புகின்றனர். சுஷாந்த் சிங் வசித்த வீடு  என்று சொன்ன பிறகும் சிலர் அதைப்பற்றி கவலைப்படாமல் வீட்டை பார்க்க வருகின்றனர். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுக்கவேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். சினிமா துறையில் தொடர்புடையவர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுப்பதில்லை வீட்டு என்று உரிமையாளர் முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.