Published:Updated:

``இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி” - மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

மாரடைப்பில் இருந்து மீண்டு வரும் நடிகை சுஷ்மிதா சென், மருத்துவரின் உரிய அனுமதிக்குப் பிறகு, தனது யோகா பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Published:Updated:

``இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி” - மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென்

மாரடைப்பில் இருந்து மீண்டு வரும் நடிகை சுஷ்மிதா சென், மருத்துவரின் உரிய அனுமதிக்குப் பிறகு, தனது யோகா பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, படக்குழுவினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டு தற்போது மெள்ள தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்

இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்ட அவர், ``உங்கள் இதயத்தை எப்போதும் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். சில தினங்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளேன்.`நிறைய இளம் வயதினரையும் மாரடைப்பு விடுவதில்லை. எனவே நீங்கள் அடிக்கடி இதய பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.

ஜிம்முக்கு சென்றதுதான் எனக்கு மிகவும் பலனளித்தது. மாரடைப்பு ஆண்களுக்கு மட்டுமே வரும் என பெண்கள் நினைத்துவிடக் கூடாது. அது பெண்களையும் பாதிக்கும். பயப்படத் தேவையில்லை ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சுஷ்மிதாவின் மற்றொரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. யோகா உருளை மீது படுத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதனுடன், ``என் வாழ்க்கை சக்கரம் இதய மருத்துவர்களால் மீட்கப்பட்டுள்ளது. மீண்டும் உடற்பயிற்சிக்குத் திரும்பியுள்ளேன். இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி. உங்கள் ஹோலி எப்படி இருந்தது? “ என அவர் பதிவிட்டுள்ளார்.

சுஷ்மிதாவின் இந்தப் பதிவு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவரது உத்வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.