Published:Updated:

"என்னை வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவிற்கு நன்றி!" - சுஷ்மிதா சென்னின் வளர்ப்பு மகளின் வைரல் பதிவு

சுஷ்மிதாசென், அவரது மகள் ரெனி சென் மற்றும் அலிசா சென்

சுஷ்மிதா சென் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்ட அவரது மகள் ரெனி சென்.

"என்னை வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவிற்கு நன்றி!" - சுஷ்மிதா சென்னின் வளர்ப்பு மகளின் வைரல் பதிவு

சுஷ்மிதா சென் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்ட அவரது மகள் ரெனி சென்.

Published:Updated:
சுஷ்மிதாசென், அவரது மகள் ரெனி சென் மற்றும் அலிசா சென்

நடிகையும் 'ஃபெமினா மிஸ் இந்தியா' மற்றும் 'மிஸ் யுனிவர்ஸ்' போன்ற அழகிப்பட்டங்களை வென்றவருமான சுஷ்மிதா சென்னின் மகள் ரெனி சென்னின் (23) பிறந்தநாள் நேற்று. இதற்காக தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரெனி, தனது அம்மா சுஷ்மிதா சென் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், "எனது பிறந்தநாளில் எனக்கு அன்பையும் ஆசீர்வாதங்களையும் தந்த அனைவருக்கும் என் நன்றிகள். இது என்னுடைய உலகம், இங்கு நான் நிபந்தனையின்றி நேசிக்கப்படுவது என்பது கடவுள் எனக்களித்த மிகப்பெரிய ஆசீர்வாதம். அதுமட்டுமில்லாமல் இன்று நான் இந்த அளவிற்கு ஒரு பெண்ணாக வளர்ந்து நிற்க என்னை வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவிற்கு நன்றி. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய இந்த 23 ஆண்டுகளை மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி... எனக்கென்று ஒரு அற்புதமான குடும்பம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு சுஷ்மிதா சென், "லவ் யூ மை பியுட்டிஃபுல் 23" என நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார்.

சுஷ்மிதா சென், தனது 19 வயதுக்குள்ளாகவே `ஃபெமினா மிஸ் இந்தியா' மற்றும் `மிஸ் யுனிவர்ஸ்' போன்ற அழகிப்பட்டங்களின் கிரீடத்தைச் சூடி சாதனை படைத்தவர். அதன்பின்னர் தமிழில் 'ரட்சகன்' முதல் இந்தியில் பல வெற்றிப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சுஷ்மிதா சென், தனது 25வது வயதில் சிங்கிள் உமனாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார். பின்னர் மீண்டும் ஒரு கைக்குழந்தையைத் தத்தெடுத்து இடுப்பில் ஒரு குழந்தை, கையில் ஒரு குழந்தையுடன் ஃபேஷன் முதல் சினிமா வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மொத்த இந்தியாவையும் நிமிர்ந்து பார்க்க வைத்தார்.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்
சினிமா, ஃபேஷன் எனப் பிரபலமாக வலம் வந்த சுஷ்மிதா இப்போது முன்பு போலப் படங்களில் நடிப்பதில்லை. தன்னைப் பற்றி வரும் செய்திகளைப் பொருட்படுத்தாமல், சிங்கிள் உமனாகத் தான் தத்தெடுத்த மகள்களான ரெனி சென் (23) மற்றும் அலிசா சென் (13) இருவரின் வாழ்க்கையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.