Published:Updated:

" திரைப்படங்களைவிட்டு விலகியதற்கு இதுதான் காரணம்"- சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

பத்து வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தைத் சுஷ்மிதா சென் தெரிவித்திருக்கிறார்.

" திரைப்படங்களைவிட்டு விலகியதற்கு இதுதான் காரணம்"- சுஷ்மிதா சென்

பத்து வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தைத் சுஷ்மிதா சென் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சுஷ்மிதா சென்

தமிழில் ரட்சகன் மற்றும் முதல்வன் போன்ற படங்களில் நடித்த ம் பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் கடந்த பத்து ஆண்டுகளாக எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. 2010-ல் ‘துள்க மில் காய (Dulha Mil Gaya)’ என்ற பாலிவுட் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு 2020-ல் ‘டிஸ்னி + ஹோட்ஸ்டர்’ தயாரிப்பில் ‘ஆர்யா’ என்ற வெப்சீரிஸ்ல் நடித்தார். ஆனால் இன்னும் திரையரங்கில் வெளியாகக்கூடிய அளவிலான மெயின்ஸ்ட்ரீம் படங்களில்அவர் நடிக்கவில்லை. இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘மெயின்ஸ்ட்ரீம் சினிமா நான் விரும்பியதைத் தரவில்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும் பத்து வருட இடைவெளியானது எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதையும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் தனக்குக் கற்றுத்தந்துள்ளதாகக் கூறினார். இந்த இடைவெளியில் தான் தத்தெடுத்த தனது இரண்டு மகள்களான ரெனி மற்றும் அலிசாவை வளர்ப்பதற்கு அவர் முக்கியத்துவம் அளித்து வந்தாகக் கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism