Published:Updated:

"நீங்கள் மரியாதையுடன் பேசினால் நானும் மரியாதையுடன் பேசுவேன்" - டாப்ஸி கோபம்; என்ன காரணம்?

நடிகை டாப்ஸி

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி, பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம். வைரலாகும் காணொலி!

"நீங்கள் மரியாதையுடன் பேசினால் நானும் மரியாதையுடன் பேசுவேன்" - டாப்ஸி கோபம்; என்ன காரணம்?

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி, பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம். வைரலாகும் காணொலி!

Published:Updated:
நடிகை டாப்ஸி

'ஆடுகளம்', 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ், இந்தி, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'சபாஷ் மிது' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது, பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 'Dobaaraa' எனும் இந்தி மொழிப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் டாப்ஸி. அப்போது டாப்ஸி நிகழ்ச்சிக்கு வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் கேமராவிற்கு போஸ் கொடுக்கும்படி கேட்டு, 'ஏன் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்தீர்கள்?' என்று கேட்டுள்ளார்.

இதனால் நடிகை டாப்ஸி மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாப்ஸி, "எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான் சரியான நேரத்திற்கு வந்து விடுவேன். நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன். நீங்கள் மரியாதையுடன் பேசினால் நானும் மரியாதையுடன் பேசுவேன். கேமரா என் பக்கம்தான் இருக்கிறது, அதனால் என் பக்கம் மட்டும்தான் தெரியும். கேமரா உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் என்னோடு எப்படிப் பேசுறீங்கன்னு எல்லோருக்கும் புரியும்" என்று கூறினார்.

இது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.