Published:Updated:

"மிஸ்டர் கோச்..."- தாமஸ் கோப்பையில் இந்தியாவின் வெற்றி தொடர்பாக தன் காதலனைப் புகழ்ந்த டாப்ஸி

நடிகை டாப்ஸி, மத்தியாஸ் போ

இந்திய அணியின் பயிற்சியாளரான முன்னாள் டேனிஷ் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் நடிகை டாப்ஸி.

Published:Updated:

"மிஸ்டர் கோச்..."- தாமஸ் கோப்பையில் இந்தியாவின் வெற்றி தொடர்பாக தன் காதலனைப் புகழ்ந்த டாப்ஸி

இந்திய அணியின் பயிற்சியாளரான முன்னாள் டேனிஷ் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் நடிகை டாப்ஸி.

நடிகை டாப்ஸி, மத்தியாஸ் போ

தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் சர்வதேச பேட்மிட்டன் போட்டியான தாமஸ் கோப்பைத் தொடர் நடைபெற்றது. இப்போட்டியின் அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான டென்மார்க் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இந்தோனேஷிய அணியை 3-0 என்ற கணக்கில் சுலபமாக வீழ்த்தி 73 வருடங்களில் முதல்முறையாக தாமஸ் பேட்மிட்டன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான முன்னாள் டேனிஷ் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவிற்கு (Mathias Boe) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் நடிகை டாப்ஸி.

டாப்ஸியின் பதிவு
டாப்ஸியின் பதிவு

டாப்ஸி மற்றும் மத்தியாஸ் போ இருவரும் நெடுநாள்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியாஸ் போ பயிற்சியாளராக இருக்கும் இந்திய பேட்மிட்டன் அணி தாமஸ் பேட்மிட்டன் கோப்பைத் தொடரில் பங்கேற்ற நாள் முதல் அவர்கள் வெற்றி பெரும்வரை அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தார் டாப்ஸி. இதையடுத்து நேற்று இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு மத்தியாஸ் போவை பாராட்டிப் பதிவிட்டுள்ளார் டாப்ஸி. அதில் "இந்தியாவுக்கான முதல் தாமஸ் கோப்பையை வென்றார்கள் வீரர்கள்" என்றும் "மிஸ்டர் கோச் நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.